Sunday, October 26, 2014

பாப்பரசரின் வருகையும், ஜனாதிபதித் தேர்தலும்

(நஜீப் பின் கபூர்)

வருகின்ற ஜனவரியில் இங்கு வருகை தர இருக்கின்ற பாப்பாண்டவர் பிரான்சிஸ்  இந்த நாட்டில் காலடி எடுத்து வைக்கின்ற மூன்றாவது பாப்பாண்டவராவர். இதற்கு முன்னர் 1970 ஸ்ரீ மா பண்டாரநாயக்க அவர்களின் காலத்தில்தான் முதன் முறையாக ஒரு பாப்பாண்டவர்  இங்கு வந்து போய் இருக்கின்றார். 

அப்படி இங்கு முதலில் வந்தவர் ஆறாவது போல் பாப்பாண்டவர். பல நாடுகளுக்குச் சுற்றுப் பயணம் மேற்கொண்ட போல் பாப்பாண்டவர்  1970 ஆண்டு திசம்பர் மாதம் 04ம் திகதி இங்கு சில மணித்தியாலங்கள் கட்டுநாயக்காவில் தங்கி இருந்து போயிருக்கின்றார். அதற்குப் பின்னர் 1995 ஜனவரி 20,21,22 திகதிகளில் இரண்டாம் ஜோன் போல் பாப்பாண்டவர் இங்கு உத்தியோகபூர்வமாக வந்திருக்கின்றார்.

இன்று உலக மக்கள் தொகையில் பொரும்பான்மையினர் கிருஸ்தவ சமயத்தைப் பின்பற்றி வருகின்றார்கள். நமது நாட்டில் போத்துக்யேர் வருகையுடன் இங்கு  கிருஸ்தவ சமயம் அறிமுகமாகின்றது. இன்று இந்த நாட்டில் 15 இலட்சம் கிருஸ்தவர்கள் வாழ்கின்றார்கள். மன்னார், கம்பஹ கிருஸ்தவர்கள் அதிகம் வாழும் பிரதான மாவட்டங்கள். இவர்களில் பெரும்பான்மையினர் றோமன் கத்தோலிக்க சமயத்தைச் சேர்ந்தவர்கள். இவர்களின் ஆன்மிகத் தலைவர் வத்திக்கானில் இருக்கின்ற பாப்பாண்டவர் என்பது குறிப்பிடத்க்கது.  

போர்த்துக்கேயர் வருகையுடன் இந்த நாட்டில் கிருஸ்தவ சமயம் அறிமுகமாகிய போது இங்கு கணிசமான எண்ணிக்கையான  சிங்களவர்களும் இந்துக்களும்  கிருஸ்தவ சமயத்தை பின்பற்றிக் கொண்டார்கள். இன்று இந்த நாட்டில் அரசியல் தலைவர்களாக இருந்த பெரும்பாலான தலைவர்கள் அன்று கிருஸ்தவ சமயத்தை பின் பற்றியவர்களின் பரம்பறையில் வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

அவர்கள் இன்று ஆட்சி அதிகாரத்தில் அமர்வதற்காக பொரும்பான்மை பௌத்த மக்களின் நல்லென்னத்தைப் பெற்றக் கொள்ளும் நோக்கில்  மீண்டும் பௌத்த சமயத்திற்கு மீண்டு வந்து, இன்று பெரும் பௌத்த தலைவர்களாக மாறி இந்த நாட்டின் அரசியல் தலைவர்களாகவும் வந்திருக்கின்றார்கள். டீஎஸ், டட்லி, ஜோன், செலமன், ஜோர்ஜ் என்பவர்கள் என இவர்களை இனம் காட்ட முடியும்.!

இது ஒரு ஜனநாயக நாடு என்ற வகையில் ஒருவருக்கு தாம் விரும்பிய சமயத்தைப் பின்பற்றவும் அதனைத் துறக்கவும் உரிமை இருக்கின்றது. எனவே இந்த மத மாற்றங்கள் தொடர்பாக எவரும் பெரிதாக அலட்டிக் கொள்ளத் தேவையில்லை. அது தனிமனித உரிமை, சுதந்திரம். இப்போது இங்கு வருகை தர இருக்கின்ற பாப்பாண்டவர்  தொடர்பாகவும் இலங்கையில் நடைபெற இருக்கின்ற ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாகவும் சற்று விளக்கமாகப் பார்ப்போம்.

நமது ஜனாதிபதி பாப்பாண்டவரை இங்கு விஜயம் செய்யுமாறு நேரில் சென்று உத்தியோகபூர்வமாக அழைப்பு விடுத்திருக்கின்றார். பாப்பாண்டவர் ஒரு சமயத் தலைவர் மட்டுமல்லாது வத்திகான் என்ற தேசத்தின் அரசியல் தலைவரும் கூட. இந்தவகையில் பாப்பாண்டவர் ஒரு நாட்டிற்கு விஜயம் செய்வதாயின் அந்த நாட்டுத் தலைவரின் அழைப்பு அவசியப்படுவதுடன் குறிப்பிட்ட நாட்டில்  இருக்கின்ற கத்தோலிக்க திருச் சபையின் தலைவரினதும் அனுமதியும் அங்கீகாரமும் அதற்கு அவசியப்படுகின்றது. 
இந்த இரு தரப்பினரிடமிருந்தும் முறையாக தற்போதய பாப்பாண்டவர் பிரான்சிஸ் அவர்களுக்கு உத்தியோக பூர்வமாக அழைப்புக் கிடத்திருக்கின்றது. இந்த இரு அழைப்புக்களை முறையாக பாப்பாண்டவரும் ஏற்றுக் கொண்டிருக்கின்றார். எனவே பாப்பாண்டவர் 2015 ஜனவரி 13,14,15ஆகிய திகதிகளில் இங்கு வருவதாக நாளும் குறிக்கபட்டு விட்டது. 

இந்த நிலையில் 2015ல் இந்த நாட்டில்   ஜனாதிபதித் தேர்தல் ஜனவரியில் என்ற நிலையும் உறுதியாகி இருக்கின்றது. இவை இரண்டையும் எப்படி ஒரே நேரத்தில் மேற் கொள்ள முடியும் என்ற விடயத்தில் தற்போது  புதிய சர்ச்சை தோன்றி இருக்கின்றது. 

பாப்பாண்டவர் ஒரு நாட்டிற்கு விஜயம் செய்வது என்பது ஒரு சாதாரண விடயமல்ல. ஒரு நெருக்கடியான சூழ்நிலையில் பாப்பாண்டவர் ஒருவர் இங்கு விஜயம் செய்வது தொடர்பில் இங்கிருக்கின்ற அதிமேற்று ராணியார் ஒரு தீர்மானத்திற்கு வர வேண்டி இருக்கின்றது. 

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் விளக்கம் கோரி அவரால் அனுப்பப்பட்ட கடிதத்திற்கு ஆளும் தரப்பிலிருந்து இந்த கட்டுரை எழுதப்படுகின்ற நேரம் வரை எந்தப் பதில் கிடைக்கவில்லை என்று அதிமேற்று ராணியார் தரப்பில் குறிப்பிடப் படுகின்றது. எனவே இந்த விடயத்தை உறுதிப்டுத்திக் கொள்ள தற்போது வத்திகானிலிருந்து ஒரு தூதுக்குழு இங்கு மிகவிரைவில் வருகை தரவும் இருக்கின்றது. 

பாப்பாண்டவர் விஜயத்தை ஒரு தப்பினர் தமது அரசியல் இலாபத்திற்காக உபயோகித்துக் கொள்ள முனைவதை வத்திகான் ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லை. பாப்பாண்டவர் வருகை என்பது அரசுக்கு வலுவூட்டும் ஒரு ஏற்பாடல்ல அவர் இங்கு வருவது இங்குள்ள மக்களுக்கு ஆசிவழங்குகின்ற ஒரு நிகழ்சி. மக்கள் அவரின் ஆசீர்வாதத்தைப் பெற்றுக் கொள்ளவும் ஆவலுடன் இருக்கின்றார்கள்.

பாப்பாண்டவர் வருகைக்கு அதி மேற்றுராணியர் மெல்கம் ரஜ்சித் அழைப்பு விடுத்தமைக்கு இரு காரணங்கள் இருக்கின்றன. ஒன்று இங்கு நடக்கும் தந்தை யேசுவை புனிதப்படுத்தகின்ற விழாவில் அவர் கலந்து கொள்வது, அடுத்து நீர் கொழும்பு போலவானையில் அமைந்திருக்கின்ற பத்தாவது பெனடிக்ட் கிருஸ்தவ உயர் கல்வி நிறுவன வைபவத்தில் கலந்து கொண்டு ஆசீவாதிக்கும் நிகழ்வு.

இப்போதுள்ள கேள்வி என்னவென்றால்; திட்டமிட்ட்படி  பாப்பாண்டவர் பிரான்சிஸ் இங்க வருவாரா இல்லையா என்பது. யேசு பக்கதர்கள் அவரை வரவேற்பதில் மிகுந்த ஆர்வமாக இருக்கின்றார்கள். அதற்கான ஏற்பாடுகளை அவர்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் செய்து கொண்டிருப்பதைப் பார்க்க முடிகின்றது.

இந்த நாட்களில் ஜனாதிபதித் தேர்தலுக்கான அறிவிப்புக்கள் வெளிவரும் என்று எதிர் பார்க்கப் படுவதால் இந்த இரு நிகழ்ச்சிகளையும் எப்படி முன்னெடுப்பது என்ற விடயத்தில் சந்தேகங்கள் பல தற்போது எழுந்திருக்கின்றது. அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த இந்த இரு விடயங்களும் திட்டமிட்டபடி ஜனவரியில் நடைபெறும் என்ற கூறி இருக்கின்றார். 

ஆனாலும் ஒரு கொந்தளிப்பான நிலை இருக்கின்ற நேரத்தில் பரிசுதத் பாப்பாண்டவர் இங்கு வருகை தறுவது சாத்தியப்படாத விடயம் என்று கத்தோலிக்க மதத் தலைவர்கள் கருதுகின்றார்கள். அதே நேரம் அழைப்புகளையும் கொடுத்துவிட்டு அவர் வரமுடியாத ஒரு சூழ்நியை இங்கு ஏற்படுத்தப் படுமானால் இங்குள்ள கிருஸ்தவ சமூகத்திற்கும் ஆட்சியாளர்களுக்கும் இது நெருக்கடிகளை ஏற்படுத்தும். 

ஜாதகக்காரர்கள் கொடுத்திருக்கின்ற நேரத்தில் தேர்தலை நடத்த முடியாமல் போனால் அது ஒரு அபச குனமாக  அதனை நம்புகின்றவர்கள் கருதவும் இடமிருக்கின்றது. எனவே தேர்தலா முக்கியம் பாப்பாண்டவர் வருகையா முக்கியம் என்ற நிலை வரும் போது தேர்தலுக்கு முன்னுரிமை வழங்குவதற்கே அதிக வாய்ப்புக்கள் இருக்கின்றது என்பது எமது ஊகமாக இருக்கின்றது.

1982 முதல் இதுவரை பல ஜனாதிபதித் தேர்தல்கள் இங்கு நடந்திருக்கின்றது. அன்று முதல் தேர்தல் நடைபெற்று வந்திருக்கின்ற ஒழுங்கு முறைகளை கால அட்டவணைகளை இப்போது சற்றுப் பார்ப்பபோம். 

ஜனவரியில் தேர்தல் அறிவிப்புச் செய்யப்பட்டால் 16 முதல் 21 நாட்களுக்கு வேட்பு மனுத் தாக்கல் செய்வதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும். அதன் பின்னர் தேர்தல் பரப்புரைகளுக்காக காலம் ஒதுக்கப்பட வேண்டும். அந்தக் காலம் எப்படிக் கடந்த காலங்களில் அமைந்திருந்தது என்பதனை  இப்போது கவனிப்போம்.

ஆண்டு   வேட்பு மனு   பரப்புரை

1982 18 நாள் 51 நாள்
1988 17 நாள் 59 நாள்
1994 20 நாள் 53 நாள்
1999 19 நாள் 54 நாள்
2005 18 நாள் 58 நாள்
2010 24 நாள் 64 நாள்
2015 ?? நாள் ?? நாள்

இந்த நடைமுறைகளைப் பார்க்கின்போது தேர்தல் ஜனவரியில் என்றால் மேற் சொன்ன கால அட்டவனைகளை உபயோகிப்பதற்கு எந்த வகையிலும் இடமிருக்காது. எனவே கால அவகாசம் இல்லாத ஒரு தேர்தலுக்கு ஆளும் தரப்பு தயாரகி திடீரென எதிரணிகளுக்கு நெருக்கடிகளைக் கொடுக்க முனைகின்றது என்றுதான் எண்ணத் தோன்றுகின்றது. 

எனவே ஜாதகக் காரர்கள் கொடுத்திருக்கின்ற படி தேர்தல் ஜனவரியில் ஜனாதிபதித் தேர்தல் என்றால் பரப்புரைகளுக்கு இருப்பது வெறும் 35 அல்லது 40 நாட்கள் மட்டுமே. அப்படியானால் ஜனவரி 12 அல்லது ஜனவரி 17 தான் தேர்தல் வர முடியும். 8ம் திகதி தேர்தல் என்றால் தேர்தல் முடிவுகள் வந்து முடிய 9 ம் திகதி மாலையாகும். 

வெற்றிக் கொண்டாட்டங்கள் ஒரு சில நாட்கள் தொடர்கின்றது என்றலும்  கூட பாப்பாண்டவர் வருகையுடன் இந்த நாட்கள் நெருக்கமாக இருக்கும். துரதிஸ்ட வசமாக தேர்தலைத் தொடர்ந்த வன்முறை தலை தூக்கினால் பாப்பாண்டவர் இங்கு தங்கி இருக்கின்ற 13,14,15ம் திகதிகள் மிகவும் ஆபதான நாட்களாக அமைய இடமிருக்கின்றது. 

இந்தக் கணிப்பின்படி மார்ச் மாதம்தான் என்பது  கடந்த கால அட்டவனைகளுக்குப் பொறுந்தும். நாம் இப்படியெல்லாம் நடைமுறைகள் தொடர்பாகக் கூட்டல் கழித்தல் வேலைகளைப் பார்த்தாலும் ஜாதகக்காரர்கள் என்ன சொல்லி வைத்திருக்கின்றார்களோ தெரியாதே! தேர்தல் ஆணையாளரை விடவும் ஜாதகக்காரர்கள்தானே தீர்மானிப்பாளர்கள் இங்கு?

No comments:

Post a Comment