எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் மிகவும் அபாயகரமானது என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார்.
சுதந்திரத்தின் பின்னர் நடைபெறும் மிகவும் மோசமான தேர்தலாகவே இதனை குறிப்பிட வேண்டும். அவசர அவசரமாக ஜனாதிபதி தேர்தலை நடாத்துமாறு நாம் கோரவில்லை. அரசாங்கமே அவசரமாக ஜனாதிபதி தேர்தலை நடாத்த முயற்சிக்கின்றது.
மக்கள் அரசாங்கத்தை நிராகரித்து வருகின்றமையை உணர்ந்து கொண்டதனால் இவ்வாறு முன்கூட்டியே தேர்தல் நடத்தப்படுகின்றது.
நீண்ட காலம் எதிர்க்கட்சியாகவே இருக்கும் போது சில முரண்பாடுகள் ஏற்படும் என்பதனை மறுப்பதற்கில்லை. அதன் காரணமாகவே கட்சி மறுசீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஐக்கிய தேசியக்கட்சி வெற்றியீட்டக் கூடிய சாத்தியங்கள் அதிகரித்துள்ளன.
இந்த நாட்டைச் சேர்ந்த கட்சி என்ற வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உதாசீனம் செய்ய முடியாது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ள முடியும்.
இந்த தேர்தலை சுலபமாக வெற்றியீட்ட முடியாது, ராஜபக்ச அரசாங்கத்துடன் கடுமையாக மோதியே வெற்றியீட்ட நேரிட்டுள்ளது. நாட்டை பாதுகாக்கவும் பௌதீக ஒருமைப்பாட்டை உறுதி செய்யவும் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமயை அவசியம் என்ற பிழையான நிலைப்பாடு காணப்படுகின்றது.
இதனை ஏற்றுக்கொள்ள முடியாது, நிறைவேற்று அதிகாரத்தின் ஊடாகவே தேசிய பாதுகாப்பை உறுதி செய்ய முடியும் என்பதற்கில்லை. மக்கள் எதிர்நோக்கி வரும் பிரச்சினைகளுக்கு அரசாங்கத்தினால் தீர்வுத் திட்டங்களை வழங்க முடியவில்லை.
சர்வதேச அழுத்தங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது. எனவே இம்முறைத் தேர்தலில் ஜனாதிபதியினால் வெற்றியீட்டக் கூடிய சாத்தியம் கிடையாது.
ஐக்கிய தேசியக் கட்சிக்கு சிறுபான்மை கட்சிகளின் ஆதரவும் கிடைக்கப் பெற்றுள்ளது என மங்கள சமரவீர சிங்கள பத்திரிகையொன்றுக்கு அளித்த நேர் காணலில் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment