Sunday, October 26, 2014

காத்தான்குடி கடற்கரையில் இறந்த நிலையில் மீன்கள், நண்டுகள் கரையொதுங்கி வருகின்றது (படங்கள்)


(பழுலுல்லாஹ் பர்ஹான்)

மட்டக்களப்பு மாவட்டத்தில் வங்காள விரிகுடா காத்தான்குடி கடற்கரையில் 26-10-2014 இன்று அதிகாலையிலிருந்து இறந்த  நிலையில் சிறிய ரக மீன்கள் மற்றும் நண்டுகள் கரையொதுங்கி வருவதாக காத்தான்குடி பிரதேச மீனவர்கள் தெரிவிக்கின்றனர். இதில் ஒரு வகையிலான நண்டுகளும் சிறிய ரக மீன்களும் இறந்த  நிலையில் கரையொதுங்கி வருகின்றது.

குறித்த விடயம் தொடர்பில் இலங்கை கடற்றொழில் திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட உதவிப் பணிப்பாளர் டொமின்;கோ ஜோர்ஜிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது 

கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் கடலில் மீன்கள் இறந்த  நிலையில் கரையொதுங்கும் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் இது கால நிலை மாற்றம் மற்றும் கடலிலுள்ள கடற் பாரைகளில் ஏற்பட்டுள்ள நீரின் உட்புறச் சூழலில் ஏற்படும் மாற்றங்களே கடல் வாழ் உயிரினங்கள் இறந்து கரையொதுங்குவதற்கு காரணம் என நறா நிறுவனம் தெரிவித்துள்ளதாக உதவிப் பணிப்பாளர் டொமின்;கோ ஜோர்ஜ் தெரிவித்தார்.

கடலில் மீன்கள் இறந்த  நிலையில் கரையொதுங்குவதை பார்வையிட பெரும் திரளான மக்கள் கடலுக்கு வருகை தந்த வண்ணமுள்ளனர். இந்த காலநிலை தொடரும் பட்சத்தில் மீன்கள் அதிகமாக இறந்த நிலையில் கரையொதுங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.



No comments:

Post a Comment