Saturday, January 24, 2015

மஹிந்த ஆசிர்வாதம் வழங்க, இலங்கை வங்கியில் கடனாக பெறப்பட்ட ரூபாய் 193,757,482,076

இலங்கை வங்கியில் கடனாக பெற்ற ரூபாய் 193,757,482,076 இன்று வரை மீள் செலுத்தாது இருப்பதாக பாராளுமன்ற பொதுக்குழு தெரிவிக்கின்றது.

இந்த தொகைகளை கடனாக அரச வங்கியான இலங்கை வங்கியில் பெற்றுக் கொள்ள முன்னைய ஜனாதிபதியும் ,நிதி அமைச்சருமான மகிந்த ராஜபக்ஷவே அனுமதி அளித்துள்ளார்.

இந்த தொகையை பெற்ற 33,675 நபர்கள் ஒரு தவணையைக் கூட மீள் செலுத்தவில்லையென தெரியவருகின்றது.
Read more ...

பெல்ஜியம் நாட்டு புகழ்பெற்ற மாடல், இஸ்லாத்தை நோக்கி...!

2012 பெல்ஜியம் அழகிப் போட்டியில் தேர்வான லிண்டஸே வான் கிளே தற்போது இஸ்லாத்தை தழுவியுள்ளார். மொராக்கோ செய்தி ஸ்தாபனம் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. தனது பெயரை ஆயிஷா என்றும் மாற்றி வைத்துக் கொண்டுள்ளார். முன்பு அரை குறை ஆடையோடு பல ஃபேஷன் ஷோக்களிலும் கலந்து கொண்டார். இஸ்லாத்தை ஏற்றதற்குப் பிறகு பொது நிகழ்ச்சிகளில் முழு உடம்பையும் மறைக்கும் வண்ணம் உடைகளை தேர்வு செய்து கலந்து கொள்வது பலரையும் ஆச்சரியத்தற்குள்ளாக்குகிறது. முன்பு மது அருந்தியவர் இன்று வெறும் சோடாக்களை மட்டுமே குடிக்கிறாராம். பன்றி மாமிசம் சாப்பிடுவதையும் விட்டு விட்டாராம்.

பெல்ஜிய கால்பந்தாட்ட வீரர் மொமுத்து டயா வை திருமணம் செய்து கொண்டுள்ளார். திருமணத்துக்கு முன்பு தனது கணவர் இஸ்லாமிய பெயர் மட்டும் போதாது அதன்படி வாழவும் வேண்டும் என்று கட்டளையிட்டார். அதையே நானும் பின்பற்றுகிறேன் என்கிறார் ஆயிஷா.

கல்லூரியில் கம்யூனிகேஷன் மேனேஜ்மெண்ட் படிப்பை மேலும் தொடர்கிறார். 2016ல் இவரது படிப்பு முடிவுறும். இவரது மன மாற்றத்துக்கு வழக்கம் போல் பெல்ஜிய நிற வெறியர்கள் இவரை தூற்ற ஆரம்பித்துள்ளனர். 'உனக்கு பிறக்கப் போகும் குழந்தைக்கு கண்களின் மஞ்சள் நிறம் மாறிவிடும், முடியின் நிறமும் தோலின் நிறமும் மாறும். இனி ஐரோப்பியன் என்று பெருமையாக சொல்லிக் கொள்ள உன்னால் முடியாது. நீ ஒரு பிசாசு' என்றெல்லாம் அர்ச்சனைகள் தொடங்கி விட்டன. ஆனால் இதைப் பற்றி எல்லாம் கவலைப் படாமல் தனக்கு கிடைத்த அழகிய வாழ்வு முறைக்கு இறைவனுக்கு நன்றி சொல்கிறார் ஆயிஷா. இவரது அழகுக்கு வெள்ளை நிறத்து ஐரோப்பியர்கள் எத்தனையோ பேர் கிடைப்பர். கருப்பராக இருந்தாலும் அவலட்சணமாக இருந்தாலும் இஸ்லாத்தை வாழ்வியலாகக் கொண்ட ஒருவரே தனக்கு சரிப்பட்டு வருவார் என்று முடிவெடுத்து இன்று இந்த ஆப்ரிக்கரை கைப்பிடித்துள்ளார் இந்த அழகி.

கருப்பும் வெள்ளையும் இன்று இஸ்லாத்தால் ஒன்றாகியுள்ளது. நிற வெறி, மொழி வெறி, கலாசார வெறி அனைத்தும் மண்ணோடு மண்ணாக்கப்பட்டுள்ளது. இனி இந்த இருவரின் கலாசாரம் முகமது நபி காட்டித் தந்த வழிமுறையாக இருக்கும். இந்த தம்பதிகளை நாமும் வாழ்த்துவோம்.

சுவனப் பிரியன்


Read more ...

வடக்கில் தமிழர் முதலமைச்சராக இருக்கும்போது, கிழக்கில் முஸ்லிம் முதலமைச்சராக இருப்பதே நியாயம்

(ஏ.பி.எம்.அஸ்ஹர்)

வடக்கு, கிழக்கைப் பொருத்த வரையில் வடக்கு மாகாணத்தில் ஒரு தமிழர் முதலமைச்சர் பதவியில் இருக்கும் போது கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்  ஒருவர் முதலமைச்சராக இருப்பதே நியாயமாகும். என்பதனை தமிழ்த் தேசியக்கூட்டப்பின் தலைமைகள் புரிந்து கொள்ளாது முதலமைச்சர் விடயத்தில் உறுதியான நிலைப்பாட்டிலிருப்பது இரு சமூகங்களுக்கிடையே விரிசலை ஏற்படுத்தும் முயற்சியாகும். என சம்மாந்துறை பிரதேச சபையின் எதிர்க்கட்சித் தலைவரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினரும், சிரேஷ்ட சட்டத்தரணியுமான எஸ்.எம்.ஏ. முஸ்தபா தெரிவித்தார்.

சம்மாந்துறை ஹிஜ்ரா சந்தியில் அமைந்துள்ள தனது கட்சி அலுவலகத்தில் இன்று சனிக்கிழமை (24) தனது ஆதரவாளர்கள் மத்தியில் கிழக்கு மாகாண முதலமைச்சர் சம்பந்தமாக கருத்துத் தெரிவிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையிலேயே- 

கிழக்கு மாகாண சபைக்கு முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினர் ஒருவர்தான் முதலமைச்சராக வருதல் வேண்டும். முதலமைச்சர் பதவியை விட்டுக்கொடுக்க வேண்டிய அவசியம் முஸ்லிம் காங்கிரசுக்கு இல்லை.

முஸ்லிம் பெரும்பான்மையாக வாழுகின்ற ஒரேயொரு சபையாக கிழக்கு மாகாணம் காணப்படுகின்றது. இதில் முஸ்லிம் ஒருவரே முதலமைச்சராக நியமிக்கப்பட வேண்டும். அதுவும் முஸ்லழம் காங்கிரஸின் ஒருவர்தான் முதலமைச்சராக வேண்டும். அதுதான் முஸ்லிம் காங்கிரஸின் நிலைமையாகும்.

தற்போது கிழக்கு மாகாண சபையிலுள்ள 37 உறுப்பினர்களில் 15 முஸ்லிம் உறுப்பினர்களும், 13 தமிழ் உறுப்பினர்களும், 09 சிங்கள உறுப்பினர்களும் உள்ளனர்கள். இதனால் முஸ்லிம் ஒருவர்தான் முதலமைச்சராக நியமிக்கப்பட வேண்டும். இதிலும் ஆகக்கூடுதலான உறுப்பினர்களைக் கொண்ட முஸ்லிம் காங்கிரசுக்குத் தான் வழங்கப்பட வேண்டுமென்பதே கிழக்கு மாகாண முஸ்லிம் மக்களின் விருப்பமாகவுள்ளது.

எமது நாட்டில் அமைந்துள்ள 09 மாகாண சபைகளில் ஒன்றான வடமாகாண சபையினை பெரும்பான்மை பலத்துடன் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு கைப்பற்றி தனது கட்சியினதும் தமிழ் மக்களின் தனித்துவத்தைப் பேண ஒரு மாகாண சபையினை வைத்துள்ளது. ஆனால் முஸ்லிம்கள் ஆளச் சாத்தியமான ஒரேயொரு மாகாண சபையாக கிழக்கு மாகாண சபையாகும்.

2012ஆம் ஆண்டு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கும் முஸ்லிம் காங்கிரசுக்கும் இடையில்  உடன்பாடொன்றும் கைச்சாத்திடப்பட்டது. இதில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி இரண்டரை வருடங்கள் முதலமைச்சர் பதவியை வகிப்பது என்றும், முஸ்லிம் காங்கிரஸ் எஞ்சிய இரண்டரை வருடங்கள் முதலமைச்சர் பதவியை வகிப்பது எனவும் இணக்கம் காணப்பட்டது. இவ்வாறான நிலையில் முதலமைச்சர் பதவியை முஸ்லிம் காங்கிரசுக்கு வழங்குவதுதான் நியாயமாகும்.

முஸ்லிம் காங்கிரஸை பொறுத்தவரை கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சர் பதவியை பெற்றாக வேண்டும். இரண்டு வருடங்களின் பின்னர் முதலமைச்சர் பதவி தமக்கு கிடைக்குமென தமது மக்களுக்கு தெரிவித்துக் கொண்ட மு. காங்கிரஸ் அந்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

முதலமைச்சர் பதவியை வைத்துக் கொண்டு இரு சமூகங்களுக்கிடையில் குரோதங்களை ஏற்படுத்தாமல் விட்டுக் கொடுப்புடன் தமிழ், முஸ்லிம் அரசியல் தலைமைகள்  செயற்பட்டு ஆரோக்கியமான முடிவுகளை எடுத்தல் வேண்டும்.

எனவே, கிழக்கு மாகாண முதலமைச்சர் விவகாரத்தில் தமிழ், முஸ்லிம் மக்கள் இணைந்து ஆட்சியினை கைப்பற்றும் தல்லதொரு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. இதனை சரியாக பயன்படுத்த வேண்டும். இதனை தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு அரசியல் சுயநலன்களை  விடுத்து இரு சமூகங்களினதும் நலன்களைக் கருத்தில் கொண்டும், இனங்கிடையே நல்லிணக்கத்தினை ஏற்படுத்தவும் விட்டுக் கொடப்புகளை மேற்கொண்டு முஸ்லிம் காங்கிரசுக்கு முதலமைச்சர் பதவியை வழங்க முன்வரவேண்டும். என்ற வேண்டுகோளையும் விடுத்தார்.  
Read more ...

பெல்ஜியம் நாட்டு புகழ்பெற்ற மாடல் இஸ்லாத்தை நோக்கி...!

2012 பெல்ஜியம் அழகிப் போட்டியில் தேர்வான லிண்டஸே வான் கிளே தற்போது இஸ்லாத்தை தழுவியுள்ளார். மொராக்கோ செய்தி ஸ்தாபனம் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. தனது பெயரை ஆயிஷா என்றும் மாற்றி வைத்துக் கொண்டுள்ளார். முன்பு அரை குறை ஆடையோடு பல ஃபேஷன் ஷோக்களிலும் கலந்து கொண்டார். இஸ்லாத்தை ஏற்றதற்குப் பிறகு பொது நிகழ்ச்சிகளில் முழு உடம்பையும் மறைக்கும் வண்ணம் உடைகளை தேர்வு செய்து கலந்து கொள்வது பலரையும் ஆச்சரியத்தற்குள்ளாக்குகிறது. முன்பு மது அருந்தியவர் இன்று வெறும் சோடாக்களை மட்டுமே குடிக்கிறாராம். பன்றி மாமிசம் சாப்பிடுவதையும் விட்டு விட்டாராம்.

பெல்ஜிய கால்பந்தாட்ட வீரர் மொமுத்து டயா வை திருமணம் செய்து கொண்டுள்ளார். திருமணத்துக்கு முன்பு தனது கணவர் இஸ்லாமிய பெயர் மட்டும் போதாது அதன்படி வாழவும் வேண்டும் என்று கட்டளையிட்டார். அதையே நானும் பின்பற்றுகிறேன் என்கிறார் ஆயிஷா.

கல்லூரியில் கம்யூனிகேஷன் மேனேஜ்மெண்ட் படிப்பை மேலும் தொடர்கிறார். 2016ல் இவரது படிப்பு முடிவுறும். இவரது மன மாற்றத்துக்கு வழக்கம் போல் பெல்ஜிய நிற வெறியர்கள் இவரை தூற்ற ஆரம்பித்துள்ளனர். 'உனக்கு பிறக்கப் போகும் குழந்தைக்கு கண்களின் மஞ்சள் நிறம் மாறிவிடும், முடியின் நிறமும் தோலின் நிறமும் மாறும். இனி ஐரோப்பியன் என்று பெருமையாக சொல்லிக் கொள்ள உன்னால் முடியாது. நீ ஒரு பிசாசு' என்றெல்லாம் அர்ச்சனைகள் தொடங்கி விட்டன. ஆனால் இதைப் பற்றி எல்லாம் கவலைப் படாமல் தனக்கு கிடைத்த அழகிய வாழ்வு முறைக்கு இறைவனுக்கு நன்றி சொல்கிறார் ஆயிஷா. இவரது அழகுக்கு வெள்ளை நிறத்து ஐரோப்பியர்கள் எத்தனையோ பேர் கிடைப்பர். கருப்பராக இருந்தாலும் அவலட்சணமாக இருந்தாலும் இஸ்லாத்தை வாழ்வியலாகக் கொண்ட ஒருவரே தனக்கு சரிப்பட்டு வருவார் என்று முடிவெடுத்து இன்று இந்த ஆப்ரிக்கரை கைப்பிடித்துள்ளார் இந்த அழகி.

கருப்பும் வெள்ளையும் இன்று இஸ்லாத்தால் ஒன்றாகியுள்ளது. நிற வெறி, மொழி வெறி, கலாசார வெறி அனைத்தும் மண்ணோடு மண்ணாக்கப்பட்டுள்ளது. இனி இந்த இருவரின் கலாசாரம் முகமது நபி காட்டித் தந்த வழிமுறையாக இருக்கும். இந்த தம்பதிகளை நாமும் வாழ்த்துவோம்.

சுவனப் பிரியன்


Read more ...

மைத்திரி - ரணில் உறவு, பொதுத் தேர்தலில் முறிவடைந்துவிடும்..!

-நஜீப் பின் கபூர்-

இப்போது எல்லோரும் 100 நாட்களைப் பற்றி பேசிக் கொண்டும் எழுதிக் கொண்டும் இருக்கின்றோம். ஆனால் 100 நாட்களில் இன்றுடன் 17 நாட்கள் கழிந்து இன்னும் அதில் எஞ்சி இருப்பது 83 நாட்கள் மட்டுமே. 100 நாள் வேலைத் திட்டத்தில் இந்த நாட்டு மக்களுக்கு முக்கியமானதொரு தினமாக வருகின்ற 29ம் திகதி வியாழக்கிழமை அமைய இருக்கின்றது. புதிய அரசின் இடைக்கால வரவு செலவுத் திட்டம் அன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட இருக்கின்றது.

மக்களுக்கு பல சலுகைகள் இந்தத் இடைக்காலத் திட்டத்தில் அடங்கி இருக்கின்றது என்று உறுதியாகக் கூற முடியும். அத்துடன் முன்பு குறிப்பிட்டது போன்று எரி பொருட்களின் விலை ஏற்கெனவே நியாயமாகக் குறைத்ததன் மூலம் புதிய மைத்திரி அரசு மக்களின் நல்லெண்ணத்தை வென்றெடுத்திருக்கின்றது. இப்படியாக 100 நாள் வேலைத் திட்டம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருந்தாலும் தற்போதய அரசுக்கும் அதாவது புதிய ஜனாதிபதிக்கும் பிரதமருக்கமிடையில் மைத்திரி-ரணில் உறவுகளில் விரிசல்கள் ஏற்பட இடமிருக்கின்றது என்பது கட்டுரையாளனது கருத்தாக இருக்கின்றது. நாம் கூறுகின்ற இந்த நெருக்கடிகள் எப்படித் தோன்றும் என்பதனைப் பார்ப்பதற்கு முன்னர் தற்போதய அரசியல் பின்னணியை சற்று நோக்குவோம்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தற்போதய ஜனாதிபதி மைத்திரி எதிரணி பொது வேட்பாளராகவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த சுதந்திரக் கட்சி வேட்பாளராகவும் களத்தில் இறங்கி இருந்தார்கள். மைத்திரியின் எதிரணியில் பலமிக்க எதிக் கட்சிகள் இடம் பிடித்து இருந்தது. அவற்றிற்கு கவர்ச்சிகரமான தலைவர்களும் தொண்டர்களும் நிறையவே இருந்தார்கள். ஆனால் மஹிந்த அணியில் சுதந்திரக் கட்சியைத் தவிர அவர்களுடன் இணைந்திருந்த கட்சிகள் அணைத்தும் போல் வங்குரோத்துக் கட்சிகளாகவே இருந்தது.

ஐக்கிய தேசியக் கட்சியின் வாக்குகள் மைத்திரிக்குக் கிடைத்ததால் இன்று ரணில் தலைமையில் அமைக்கப்பட்டிருக்கின்ற அமைச்சரiவையில் அந்தக் கட்சிக்கு அதிகமான அமைச்சுக்கள் கிடைத்திருக்கின்றது.

தேர்தலில் மைத்திரியின் வெற்றியைத் தொடர்ந்து முன்னாள் ஆளும் தரப்பிலிருந்து பெரும் எண்ணிக்கையான மக்கள் பிரதிநிதிகள் வெளியேறி ஜனாதிபதி மைத்திரியுடன் இணைந்து கொள்ள முனைந்ததால் பாராளுமன்றத்திலும் மாகாண சபைகளிலும் உள்ளுராட்சி மன்றங்களிலும் ஆட்சி மாற்றங்கள் நிகழ்ந்து அவை ஐக்கிய தேசியக் கட்சியின் கட்டுப்பாட்டில் வருவதற்கான வாய்ப்புக்கள் மேலோங்கிக் கொண்டிருந்தது.

இந்த நிலையில் ஆளும் சுதந்திரக் கட்சியில் இருந்து பெரும் எண்ணிக்கையான பாராளுமன்ற உறுப்பினர்கள் மைத்திரியை சுதந்திரக் கட்சியின் தலைவராக அறிவிப்புச் செய்தனர். அதே தினத்தில் இன்னும் சிலர் மஹிந்த ராஜபக்ஷவை தலைவராக மீண்டும் உறுதிப்படுத்தி தங்களது நிலைப்பாட்டை தேர்தல் ஆணையாளருக்கும் உத்தியோக பூர்வமாக அறிவிப்புச் செய்திருக்கின்றனர். இந்த கட்டுரை எழுதப்படுகின்ற நேரம் வரை தேர்தல் திணைக்களப் பதிவுகளின் படி சுதந்திரக் கட்சியின் தலைவராக மஹிந்த ராஜபக்ஷவே இருந்து வருகின்றார்.

இதற்கிடையில் கட்சி இரண்டாகப் பிளவு பட்டால் எதிர்காலத்தில் தங்களுக்குப் பதவிக்கு வருவது கஷ்டமான அமைந்து விடும் என்று சுதந்திரக் கட்சிக்காரர்கள் எண்ணியதால் ராஜபக்ஷவுடனும் மைத்திரியுடனும் பேசி கட்சி பிளவுபடாதவகையில் ஒரு தீர்மானத்திற்கு வருவதற்கு சுதந்திரக் கட்சி முக்கியஸ்தர்கள் நடவடிக்கைகளை மேற் கொண்டனர். சபாநாயகர் சாமல் ராஜபக்ஷ வீட்டில் நடந்த மைத்திரி-மஹிந்த சந்திப்பில் தலைமைப் பதவியை விட்டுக் கொடுப்பதற்கு மஹிந்த இணங்கி இருக்கின்றார். 

சபாநாயகர் சமல் ராஜபக்ஷ வீட்டில் பூட்டிய அறை ஒன்றுக்குள் மைத்திரிக்கும் - மஹிந்தவுக்குமிடையே சந்திப்பொன்று நடந்திருக்கின்றது. இது பற்றிய தகவல்கள் பகிரங்கமாகத போதிலும் அந்த சந்திப்பில் தனது குடும்ப நலன்கள் பாதுகாப்புத் தொடர்பாகவே மஹிந்த அதிகம் அக்கறை எடுத்துக் கொண்டதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றது. மைத்திரி அங்கு மென்மையாக நடந்து கொண்டாலும் ரணில் அதற்குப் பச்சைக் கொடி காட்டினாலும் மைத்திரியை பதவிக்கு அமர்த்திய கடும் போக்காளர்களின் செயல்பாடுகளினால் மைத்திரி-மஹிந்த-ரணில் முக்கோண உடன்பாடுகள்-இணக்கப்படுகள் கேள்விக்குறியாகி இருக்கின்றது.

மைத்திரிக்குத் சுதந்திரக் கட்சியின் தலைமைப் பதவியை கொடுத்தது ராஜபக்ஷக்களின் மற்மொரு சதி வேலையாக இருக்கவும் இடமிருக்கின்றது. மைத்திரியை இன்று ஏகமனதாக தலைவராக ஏற்றுக் கொண்டவர்களின் கணிசமான தொகையினர் ராஜபக்ஷ விசுவாசிகள். இப்படி ஒரு திட்டத்தை முன்னெடுத்து ஐக்கிய தேசியக் கட்சிக்கும் மைத்திரிக்குமிடையே உறவில் பிளவுகளைத் தோற்றுவிப்பது இவர்களது உள்நோக்கமாக இருக்கவும் இடமிருக்கின்றது.

இந்த நேரத்தில் 100 நாள் வேலைத் திட்டத்தை பிரச்சனைகளின்றி முன்னெடுப்பதற்கு மைத்திரிக்குப் பாராளுமன்றத்தில் பெரும்பான்மை தேவைப்படுகின்றது. எனவே தேர்தல் காலங்களில் தன்னைத் திட்டியவர்களையும் தனது அணியில் வைத்திருக்க வேண்டி தேவை மைத்திரிக்கு இருக்கின்றது. இதனைப் பொது மக்களும் அரசியல் ஆர்வலர்களும் புரிந்து கொள்ள வேண்டும். இதற்கிடையில் விமல் வீரவன்ச வாசு போன்றவர்கள் மஹிந்தவின் இந்த விட்டுக் கொடுப்பு ஒரு தற்கொலை முயற்சி என்று சாடி இருக்கின்றார்கள். விமல் தரப்பினர் மஹிந்த தலைமையில் புதுக் கட்சி சமைத்து தேர்தலில் நிற்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தி;ருக்கின்றார்கள்.

சுதந்திரக் கட்சி செயலாளர் பிரியதர்சன யாப்பா கட்சிக் கொள்கைக்கு முறனாக மாகாண சபைகளிலும் உள்ளுராட்சி மன்றங்களிலும் சுதந்திரக் கட்சி மக்கள் பிரதிநிதிகள் ஐக்கிய தேசியக் கட்சியை ஆட்சியில் அமர்த்த துணை போகக்கூடாது என்று எச்சரிக்கை விடுத்திருக்கின்றார். எனவே 100 நாள் வேலைத் திட்டத்திற்கு சுதந்திரக் கட்சி ஆதரவு அளித்தாலும் ஐக்கிய தேசியக் கட்சியை ஓரம் கட்டி விட்டுப் பாராளுமன்றத்தில் தனது பெரும்பான்மையை உறுதிப்படுத்திக் கொள்ள சந்தர்ப்பத்ததை எதிர் பார்த்துக் கொண்டிருக்கின்றது சுதந்திரக் கட்சி என்பது தெளிவாகத் தெரிகின்றது. எனவே எதிர்வரும் பொதுத் தேர்தலில் இந்த இலக்கை அடைய அந்தக் கட்சி கடும் முயற்சி பண்ணும்.

100 நாள் வேலைத் திட்டத்தை தொடர்ந்து பொதுத் தேர்தல் நடைபெறும் போது தமது பெரும்பான்மையை நிலை நாட்டுவதற்கு சுதந்திரக் கட்சியும் ஐக்கிய தேசியக் கட்சியும் பலப்பரீட்சையில் இறங்கும் அப்போது கட்சித் தலைவர் என்ற வகையில் மைத்திரி சுதந்திரக் கட்சியின் வெற்றிக்கு தனது பங்களிப்பை வழங்க வேண்டி இருக்கும்;. அதே போன்று ரணிலும் ஐக்கிய தேசியக் கட்சியின் வெற்றிக்குத் தனது ஒத்துழைப்பை வழங்க வேண்டி வரும். எனவே இன்று கூடி வாழ்கின்றவர்கள் பொதுத் தேர்தலில் கட்டயம் பிரிந்து வேலை பார்க்க வேண்டிய நிலை இருக்கின்றது. அது தவிர்க்க முடியாதது.

மைத்திரி ஜனாதிபதி என்ற வகையில் தேர்தல் மேடைகளில் ஏறக்கூடாது என்ற இணக்கப்பாட்டை தன்னை வெற்றி பெறச் செய்தவர்களிடத்தில் முன்பே வழங்கி இருப்பதால் சுதந்திரக் கட்சி மேடைகளில் அவர் ஏற முடியாத நிலை.! இந்த நிலையின் கட்சியில் தனக்கிருக்கின்ற பிடியை மைத்திரி இழக்க வேண்டி வரும். இது ராஜபக்ஷ மீண்டும் கட்சியில் முக்கிய இடத்தைப் பிடிக்க வாய்ப்பாக அமையவும் முடியும். 

எனவே சந்திரிக்காவைக் கட்சியின் தலைவராக நிறுத்தி ஒரு பாதுகாப்பை மைத்திரி பெற்றுக் கொள்ள முனையக்கூடும் இதற்கு சுதந்திரக் கட்சியில் யாப்பில் மாற்றத்தைக் கொண்டு வர வேண்டி இருக்கின்றது. இதனை சுதந்திரக் கட்சியிலுள்ள மஹிந்த விசுவாசிகள் விருப்ப மாட்டார்கள் என்பது தெளிவு. எனவே சுதந்திரக் கட்சியில் மீண்டும் மைத்திரி - மஹிந்த பிளவுகள் தோன்றவும் இடமிருக்கின்றது. 

வருகின்ற பொதுத் தேர்தல் நேரடித் தொகுதி மட்டத்தில் நடாத்துவதற்கு கால அவகாசம் போதாது என்று கூறப்படுவதனால் தற்போதுள்ள விகிதசாரா முறைப்படியே தேர்தல் நடக்க அதிக வாய்புக்கள் இருக்கின்றது. ஊழல் புரிந்தவர்களுக்கும் வன்முறையாளர்களுக்கும் போதைவஸ்துக் காரர்களுக்கும் சீட்டுக் கொடுக்கக் கூடாது என்று மைத்திரிக்கு ஆதரவு வழங்கியவர்கள் பகிரங்கமாக பேசி வந்தாலும் சுதந்திரக் கட்சியைப் பெருத்த வரை இவர்களை ஓரம் கட்டுவது என்பது மைத்திரிக்கு இலகுவான காரியமாக இருக்க மாட்டது.

வருகின்ற பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி தனியாகவும் சுதந்திரக் கட்சி தனியாகவும் போட்டி போடுகின்ற நிலை வரும்போது வடக்கில் தமிழ் கூட்மைப்புத் தனியாக களத்தில் இறங்கும். இந்தத் தேர்தலில் மைத்திரிக்கு வாக்களித்த ஜேவிபி கூட தனித்துக் களமிறங்கி தனது வல்லமையை நிரூபிக்க முனையக் கூடும். பொன்சேக்க தரப்பு ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணக்கப்பாட்டை ஏற்படுத்திக் கொண்டு தேர்தலில் குதிக்க முனையும். 

முஸ்லிம் கட்சிகள் தமது  வெற்றி வாய்ப்பு ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து கொண்டால் மட்டும்தான் உறுதி என்று கருதுவதால் அவை ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணக்கப்பாட்டிற்கு வந்து தேர்தலில் போட்டியிட்டு கடந்த காலங்களைப் போன்றே பட்டம் பதவிகளுக்காக மீண்டும் தாவல்களை நிச்;சயமாக மேற் கொள்ள இடமிருக்கின்றது. மலையகக் கட்சிகளும் பெரும்பாலும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்தே களத்தில் குதிக்கும். 

இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சி பொதுத் தேர்தலுக்குத் இன்னும் தன்னைத் தயார் செய்து கொள்ளாத நிலையில் சுதந்திரக் கட்சி வருகின்ற தேர்தலில் மைத்திரி தலைமையில் சுலபமாக தனது இலக்கை அடைந்து மீண்டும் பதவிக்கு வர அதிக வாய்புக்கள் இருக்கின்றது. எனவே சுதந்திரக் கட்சியும் ஐக்கிய தேசியக் கட்சியும் நேரடியாக பலப்பரீட்சையில் இறங்கும்போது அங்கு போட்டி நிலை ஏற்படுவது தவிர்க்க முடியாதது. எனவே தாம் பதவிக்குக் கொண்டு வந்த மைத்திரியை எதிரியாக பார்க்க வேண்டிய நிலை பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு வரும். 

சுதந்திரக் கட்சி கடந்த வெள்ளிக் கிழமை கூடி எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான வேலைத் திட்டங்கள் தொடர்பாக பல தீர்மானங்களை ஜனாதிபதி மைத்திரி தலைமையில் கூடி எடுத்திருக்கின்றது. ஐக்கிய தேசியக் கட்சி இன்னும் அடுத்த தேர்தலுக்கு முகம் கொடுப்பது தொடர்பாக ஆரோக்கியமான கலந்துறையாடல்களையோ ஏற்பாடுகளையோ செய்யவில்லை. 

தற்போதய பிரதமர் ரணில் அரசில் அமைச்சுக்கள் வழங்கப்பட்ட ஒழுங்கில் கூட தனிப்பட்ட விருப் வெறுப்புக்கள் வெளிப்பட்டிருக்கின்றது. உதாரணத்துக்கு வேண்டுமானால் சில நாமங்களை இங்கு குறிப்பிட முடியும் ரோசி சேனாநாயக்க, சுஜீவ சேரசிங்ஹ, போன்றவர்களுக்கு வழங்கப்பட்ட அமைச்சுக்கள் எந்த வகையிலும் பெறுத்தமற்றது. அதே போன்று கல்வி அமைச்சு , பாதுகாப்பு ராஜாங்க அமைச்சு என்பவற்றிற்கு நியமிக்கப்பட்டவர்கள் அதற்குப் பொறுத்தமானவர்களா என்ற சந்தேகம் கட்டுரையாளனுக்கு இருக்கின்றது. இது ரணில் தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்களின் பிரதிபலிப்பாக இருக்க வேண்டும் என்று தான் எண்ணத் தோன்றுகின்றது.

நேரடி தொகுதி முறையில் தேர்தல் நடத்தவதற்கு எல்லைகளைப் பிரிப்பதற்கு காலம் போதாது என்று குறிப்பிடப்படுகின்றது. ஆனால் எல்லாத் தொகுதிகளிலும் இந்த எல்லை மாற்றங்களைச் செய்ய வேண்டிய தேவை இல்லை என்பது எமது கருத்து. 25 அல்லது 30 தொகுதிகள் வரையிலேயே புதிய எல்லைகளை இனம்கான வேண்டி இருக்கின்றது. எனவே புதிய முறையில் தொகுதி அடிப்படையிலும் விகிதசார அடிப்படையிலும் கலந்து நடக்கின்ற தேர்தலில் கட்சி தாவ முடியாதவாறு யாப்புத் திருத்தங்களை செய்து வருகின்ற தேர்தலை நடாத்தினால் மிகவும் பொறுத்தமாக இருக்கும். என்பது கட்டுரையாளன் கருத்து.     
Read more ...

மைத்திரி + சந்திரிக்காவை ஆபாச மொழிகளால் பேசிய எஸ்.பி. க்கு சுதந்திரக் கட்சியின் உபதலைவர் பதவி

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உப தலைவராக முன்னாள் கல்வி அமைச்சர் எஸ்.பி. திசாநாயக்க நிமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெற்ற கட்சியின் மத்திய குழு கூட்டத்திலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது பொதுவேட்பாளராக போட்டியிட்ட மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக ஆபாச மொழிகளால் சாடியிருந்தார். 
மேலும் தேர்தல் பிரசார கூட்டமொன்றில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவையும் ஆபாச மொழிகளால் பேசியிருந்தார்.

இந்நிலையிலேயே எஸ்.பி. திசாநாயக்க ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உப தலைவராக நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. Vi
Read more ...

Contributions of diaspora communities to the process of nation building in Sri Lanka

-By Dr RIFAI. UK-

           Tamil Diaspora community can play a great role in the process of nation building in Sri Lanka today. Most of Tamil people I have spoken agree Tamil community should work with new government to develop Sri Lanka. They are willing to rebuild North and East region. Yet, it is up to new government to formulate some working mechanisms with Tamil diaspora so that they could happily come back to Sri Lanka and invest in Northern & Eastern part of Sri Lanka. 

          I think that new president should take some bold step to reconcile with Tamil community.  Tamil political leadership should take some steps to reconcile with Sri Lankan governments. I think that 60 years of distrust and cynicism between Tamil, Muslim and Sinhalese community should be wiped out from surface of Sri Lanka forever. I think that TNA and some other political parties should be integrated into national politics. This could be done by offering Tamil MPs some powerful ministerial posts in the cabinet. 

        It was reported that TNA would not accept any ministerial posts from this government. They argue that accepting any ministerial post will be detrimental for them to win over Tamil political rights. For that reason they are not willing to integrate into national politics. They feel that once they have accepted any ministerial post they have be politically enslaved or forced to bow down to Sinhalese political leadership. This type of negative thinking would not take this nation anywhere. I think rather than thinking negatively Tamil political should engage in nation building process. They should feel that they an integral part of Sri Lanka.  We should work to develop all regions of Sri Lanka nationally.  We should work to enrich all communities of Sri Lanka. We need to create this gracious mind set ups in our political leadership.

            Tamil politicians think they are elected to work for Tamils alone, Sinhalese politician think that they are elected to work for Sinhalese community alone, Muslim politicians think they are elected to serve to Muslim community alone. We need to break this regressive mind set up. . Communal mind set up is not constructive thinking. This mind set up begun since we got independence from Britain. This communal thinking is a curse on all Sri Lankan communities. We should come out from this narrow thinking and build a national identity with differences in our cultural identities. 

             His Excellency   President Maithripala Serisena is the president for all communities.  He is the president for the entire nation. Yet, unfortunately, there is no such national feeling among Tamil community. Tamil population should not be marginalised in nation building process. A Tamil friend of mine told me that if Sri Lankan government has taken any meaningful development programmes of reconciliation in North and East people will forget all what happened in the past. Lesson learned and reconciliation report is an eye wash and it did not bring any meaningful reconciliation.  Confrontational politics of Tamil political leadership would not bring any benefit for Tamils. In the same way, marginalization of Tamils by Singhalese   leadership would not bring any good for Sri Lanka. It is timely needed to have some sort of communal reconciliation in Sri Lanka. Otherwise, future generations will suffer a lot. 


1) Tamil diaspora’s contribution to the development of North and East: 

 Tamils of Today are not Tamils of the past decades. Today, Tamil people have a lot to offer for the development of Sri Lanka. Take for instance, Tamil diaspora community in Europe they could do a lot financially to develop North and East. Why does not Sri Lankan government create some mechanism so that Tamil people could invest in North and East? Why should Tamil community in North and East deprive of this golden opportunity to develop their region through their investment?  New Government should give dual citizenship to all Sri Lankan citizens who live in abroad. In this way, Sri Lanka could bring a lot of investments from Tamils who live in Europe. Countries like Pakistan, India and Bangladesh encourage their citizens who live abroad to invest in their countries, yet, Sri Lanka government have some unnecessary fear from its citizens who live abroad. Government should open the country for foreign investment. What would be better investment than that of its own citizen’s investment in their native places? I have spoken to many Tamil people they are  ready to invest in North and East yet, Sri Lankan government is not facilitating realistic ways to do that. In the same way, there is no harm in giving administrative powers such as local government, health, and education. Giving such power wound not pose any national threat. Such a broader minded thinking is needed to make any meaningful reconciliation.  

2) Contributions of Tamil academics and professionals to the post conflict Sri Lanka. 
   
It is estimated that nearly one million Sri Lankans live in European countries today (This is approximate estimate it may be less or little more). Out of this totally, many people are professionally qualified people like doctors, engineers, accountants, judges, lawyers, teachers, academics and other professionals. Most of these Sri Lankan expatriates came from Sri Lankan universities and institutes. It is reported that thousands of Sri Lankan doctors are working in the UK alone likewise, thousands of Sri Lankan professionals work in European countries. These people have moral duty to support nation building process in Sri Lanka. Most of these professionals have already benefited from Sri Lankan government’s free education in schools and universities. Now they should pay back. In return new Sri Lankan government should encourage and facilitate to get back these professionals into Sri Lanka. There is no system or mechanism to do this right now. This begs the question of dual nationality in Sri Lanka as well. 

3) The debate for and against dual nationality in Sri Lanka.

Previous government did not have any desire or will power to offer dual citizenship for Sri Lankans who live in European countries for fear of Tamil Eelam diaspora. The previous government assumed that a large number of Tamils will come back and re-start Tamil struggle once again. This is a baseless fear. Today, dual citizenship could bring a lot of economic benefits to Sri Lanka. Professional and business people will make some investments in Sri Lanka. To expedite this, new Sri Lankan government should facilitate dual citizenship. 

This could create thousands of jobs for the local people in Sri Lanka. This would boost the profit of Sri Lankan Airline as well. Former president on his visit to London in 2006 invited all Sri Lankan professionals back home yet, unfortunately, due to the stupidity of some officers in previous government Sri Lanka that did not materialise. Dual citizenship card was used for some political gains. To get maximum economic benefits from its expatriate communities in Europe Sri Lankan government should issue dual citizenship all Sri Lankans living in Europe. It is in the national of Sri Lanka to expedite this process. We hope that there are some cleaver people in Sri Lankan government today to do this. 

Read more ...

முதலில் மக்களுக்கு நிவாரணங்களை வழங்கியதன் பின்னர், மோசடிக்காரர்களை கைது செய்வோம் - ரணில்

மக்களுக்கு நிவாரணங்களை வழங்கியதன் பின்னரே மோசடிக் காரர்களை கைது செய்யவிருப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

தெனியாய – பல்லேகம பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போது அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

நிவாரணங்கள் மூலம் மக்கள் நன்மை அடைய வேண்டும்.

இதன் காரணமாகவே பெற்றோல் உள்ளிட்ட எரிதிரவங்களின் விலையை குறைக்குமாறு தாம் பணித்ததாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளார்.

இதன் காரணமாக தற்போது நாட்டில் உள்ள 10 லட்சத்துக்கும் அதிகமான முச்சக்கர வண்டிகளின் சாரதிகள் நன்மை அடைவார்கள்.

முன்னாள் அரசாங்கம் பொது மக்களுக்கு வழங்கக்கூடிய நிவாரணத்தை மோசடி செய்திருக்கிறது.

கடந்த நான்கு வருடங்களில் பாரிய அளவு அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைத்திருக்க முடியும்.

ஆனால் அதனை முன்னாள் அரசாங்கம் செய்யவில்லை என்று ரணில் கூறினார்.

இதன் போது, மக்களின் பணத்தை மோசடி செய்தவர்களை கைது செய்யுமாறு, பொது மக்கள் கோரினார்கள்.

இதற்கு பதில் வழங்கிய பிரதமர் ரணில் விக்ரமசிங்க, முதலில் மக்களுக்கு நிவாரணங்களை வழங்கியதன் பின்னர், மோசடிக்காரர்களை கைது செய்வோம் என்று கூறினார்.

கிராம மக்களின் கைகளில் பணம் புரளும் வகையிலான பொருளாதாரம் ஒன்று உருவாக்கப்பட வேண்டும். அவ்வாறு செய்தால் அடிமட்ட வர்த்தகங்கள் அதிகரிக்கும். இதனால் அரசாங்கத்துக்கு வரிவருமானமும் கூடும். இதுதான் வரி வருமானத்தைக் கொண்டு அரசாங்கத்தை கட்டியெழுப்புவதற்கான வழி.

இதனை விடுத்து நேரடிய அத்தியாவசிய பொருட்கள் மீது வரியை அதிகரிப்பதால் நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியாது என்று பிரதமர் கூறியுள்ளார்.

இதேவேளை எதிர்வரும் 29ம் திகதி சமர்ப்பிக்கப்படவுள்ள இடைக்கால வரவு செலவுத்திட்டத்தின் போது விலைக்குறைப்பு மேற்கொள்ளப்படவுள்ள அத்தியாவசிய பொருட்கள் குறித்த விபரங்கள் அறிவிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Read more ...

இடிந்துபோன ராஜபக்ஷ கோட்டைக்குள், குவிந்திருந்த ஆசியாவின் ஆச்சர்யங்கள்

-நஜீப் பின் கபூர்-

சுதந்திர இலங்கையின் வரலாற்றில் பல தகவல்களைப் படித்துத் தெரிந்து கொண்ட எமக்கு நிகழ்கால நடப்புக்கள் தொடர்பான காட்சிகளை நேரடியாகப் பார்க்க வாய்த்திருக்கின்றது. இலங்கையில் மிகப் பாரிய மஹவலி அபிவிருத்தித் திட்டத்தை அன்று துவக்கி வைத்த போது, நாட்டை ஆசியாவின் தானியக் களஞ்சியமாக மாற்றப்போவதாகவும் இந்தியாவுக்கே மின்சாரத்தை ஏற்றுமதி செய்யப்போவதாகவும் அப்போதய பிரதமர் ட்டலி சேனநாயக்க அன்றைய துவக்க விழாவின் போது குறிப்பிட்டிருந்தார். 1978 அரசியல் யாப்பைத் தோற்றுவித்த ஜே.ஆர். ஜெயவர்தன நாட்டை ஒரு சிங்கப்பூராக கட்டியெழுப்பப் போவதாக சூளுரைத்திருந்தார். இவை கடந்த கால வரலாறு. 

இந்தக் கதைகளுடன் மக்களுக்கு ஒரு புதுக்கதை விட்டு ஆட்சியை தொடர முனைந்தார் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ. இந்த நாட்டைத் தான் ஆசியாவின் ஆச்சர்யமான ஒரு நாடக மாற்றிக் காட்டப் போவதாக் அவர் கூறி மக்களுக்கு வாக்குறுதி கொடுத்தார். அப்படியானால் சீனா, யப்பான், மலேசியா, சிங்கப்பூர் என்பவற்றை விஞ்சிய முன்னேற்றம் போலும்.! ஆனால் நாடு ஆசியாவின் ஆச்சர்யமாகியதோ இல்லையோ நாட்டில் பல ஆச்சர்யங்கள் அவர் காலத்தில் இங்கு நடந்திருக்கின்றது என்பதனை இப்போது நாடும் உலகமும் பார்த்துக் கொண்டிருக்கின்றது. 

கடந்த வாரம் மக்கள் ஆணைக்கு எதிராக ராஜபக்ஷ கோட்டைக்குள் நடந்த இராணுவச்சதி பற்றிய தகவல்களைச் சொல்லி இருந்தோம். இந்த வாரம் இடிந்து போன ராஜபக்ஷ கோட்டைக்குள் குவிந்து கிடந்த ஆசியாவின் ஆச்சர்யங்கள் பற்றிப் பார்க்கலாம் என்று தோன்றுகின்றது. நாட்டை ஆசியாவின் ஆச்சர்யமாக மாற்றிக் காட்டுக்கின்றேன் பார் என்று மக்களுக்கு சொன்ன முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கோட்டை இடிந்து போன நிலையில் இன்று அந்தக் கோட்டைக்குள் நடந்த ஆச்சர்யங்கள் பற்றி நாடே பேசிக் கொண்டிருக்கின்றது. இப்போது அது பற்றிப் பார்ப்போம்.

காலி கடற் பரப்பில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கப்பலில் இருந்த கொள்களன்களில் பெருந் தொகையான ஆயுதங்கள் பற்றி ஊடகங்களில் பேசப்பட்டது அந்த ஊடகங்கள் அனைத்தும் சட்டரீயானதுதான் என்று புதிய பாதுகாப்புச் செயலாளரும் சான்றிதழ் கொடுத்திருக்கின்றார். என்றாலும் ராஜபக்ஷாக்களின் காலத்தின் துவக்கப்பட்ட இந்த கடற் பிராயாணங்களின் போது கப்பல்கள் கொள்ளையிடுவதற்கு எதிரான நடவடிக்கைகளுக்கு என உருவாக்கப்பட்டதாகச் சொல்லப்படுகின்ற இந்த ஆயுதப் பிரிவில் இந்தளவு ஆயுதங்கள் எதற்கு என்ற கேள்விகள் இன்னும் எழுப்பப்பட்டுக் கொண்டிருக்கின்றது. ஆயுதங்களுக்குப் புறம்பாக அங்கு 12 இலட்சம் பல்வேறு வகையான தோடகள் கண்டு பிடிக்கப்பட்டிருக்கின்றது.

எனவே புதிய பாதுகாப்புச் செயலாளர் இது சட்டரீயானது என்று கூறினாலும் இந்த ஆயுதங்கள் தொடர்பான விவகாரம் இன்னும் தீர்ந்து விட்டடதாகத் தெரிய வில்லை. மேலும் இன்னும் மூன்று இடங்களில் இது போன்று தனியார் நிறுவனத்திற்குச் சொந்தமானது என்று சொல்லப்படுகின்ற ஆயுகங்கள் பதுக்கிவைத்திருக்கின்ற இடங்கள் தொடர்பான தகவல் கிடைத்திருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்திருக்கின்றார். மேலும் பண்டாரநாயக்க சர்வதேச மண்டபத்திலும் பெருந் தொகையான ஆயுதங்கள் கைப்பற்றப் பட்டிருக்கின்றது.

ரத்தன லங்கா என்ற தனியார் ஆயுத நிறுவனத்தில் இருந்த ஆயிரக்கணக்கான ஆயுதங்கள் யார் யாருக்க விநியோகிக்கப்பட்டது என்று விபரங்கள் பற்றி தற்போது தேடப்ட்டுக் கொண்டிருக்கின்றது. இதில் 151 ஆயுதங்கள் மட்டுமே தற்போது இருப்பதாகக் கூறபப்டுகின்றது. ஏனையவற்றிற்கு என்ன நடந்தது என்பதும் கேள்விக்குறியாக இருக்கின்றது. மேலும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் தனியான பாதுக்காப்புப் பிரிவொன்றை வழி நடாத்தி வந்திருக்கின்றார் என்று கூறப்படுகின்ற நிலையில், முன்னாள் ஜனாதிபதியின் கையாள் என்று முழு நாடுமே அறிந்த அமைச்சர் மேர்வின் சில்வா நாட்டில் நடந்த முக்கியமான படுகொலைகளுக்கு குறிப்பாக ஊடகவியலாளர் லசந்த விக்கிரமசிங்ஹவின் படுகொலை, பாரத லக்ஸ்மன் படுகொலை போன்றவற்றிற்கு நேரடியாக கோட்டபே ராஜபக்ஷதான் காரணம் என்று அவர் கூறியது மட்டுமல்லாமல், அந்த தகவல்கள் தொடர்பான முறைப்பாட்டையும் எழுத்து மூலமாக சட்டத்தரணிகள் ஊடக குற்ற பிரிவுக்கு கையளித்து, ராஜபக்ஷக்களுக்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றார் முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா. இதுவும் ஆசியாவின் ஒரு ஆச்சர்யமாகத் தான் மக்கள் தற்போது பார்க்கின்றார்கள். 

தேர்தல் காலங்களில் விநியோகிப்பதற்காக சீனாவிலிருந்து கொண்டவரப்பட்ட ஆயிரக் கணக்கான ராஜபக்ஷவினதும் நாமலிதும் உருவங்கள் பெறித்த சுவர் கடிகாரங்கள் பல இடங்களில் கண்டெடுக்கப் பட்டிருக்கின்றது இவற்றின் பெறுமதி கோடிக் கணக்கான ரூபாய்கள் என்று கணக்கிடப்பட்டிருக்கின்றது. இதற்கு மேலாக தேர்தல் காலங்களில் சட்டத்திற்கு முறனான வகையில் விநியோகிப்பதற்காக பதுக்கி வைக்கபட்டடிருந்த பொருந் தொகையான பொருட்கள் நாட்டில் பல இடங்களில் கண்டெடுக்கப்பட்டு வருகின்றது. 

ஜோன் கொத்தலாவலை பாதுகாப்புக் கல்லூரியில் அமைக்கப்பட்டிருக்கின்ற தனியார் வைத்திய கல்லூரியை நிறுவுவதற்கு முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டபே ராஜபக்ஷ  அரச வங்கிகளில் இருந்து பல நூறு கோடி பணத்தை கடனாக எடுத்திருக்கின்றார். இந்தக் கடனைத் திருப்பிக் கட்டுகின்ற பொறுப்பை அவர் இலங்கை மின்சார சபையிடம் ஒப்படைத்திருக்கின்றார். எனவே அவர்பெற்ற கடனைக் கட்டுவதற்கு இன்று மக்களிடமிருந்து அந்த நிறுவனங்கள் அதிகமான கட்டணங்களை மின்சாரத்திற்காக அறவிட்டுக் கொண்டிருக்கின்றது என்று அமைச்சர் பட்டலி சம்பிக்க ரணவக்க குற்றம் சாட்டுகின்றார். எனவே இதுவும் ஆசியாவின ஓர் ஆச்சர்யம்தான் என்று கூற வேண்டும்.

மேலும் கோட்டபே ராஜபக்ஷ பெயரில் 800 கோடி வங்கியில் இருக்கின்றது என்று கண்டுபிடிக்கப் பட்டிருக்கின்றது என்று ஒரு தகவல் வெளி வந்தது. பின்னர் அந்த வங்கிக் கணக்கு பாதுகாப்பு தொடர்பான சட்ட ரீதியான கணக்குகள் என்று அதிகாரிகள் குறிப்பிட்டாலும் அப்படி ஒரு கணக்கை கோட்டாபே தனது பெயரில் வைத்திருக்க முடியாது அது இலங்கை அரசின் நிதி நிறுவனங்களின் நடைமுறைக்கு முறனானது ஒழுங்கு முறை. இது பற்றிய விசாரணைகள தொடரும் என்று தற்போதய அரசின் ஊடகப் பேச்சாளரும் சுகாதார அமைச்சருமான ராஜித சேனரத்ன அடித்துக் கூறுகின்றார். மேலும் அரசின் நிதி நிருவாக நடைமுறை தெரியாத இராணுவ அதிகாரிகள் இது பற்றி கருத்துக் கூறக் கூடாது என்றும் அவர் சொல்லி இருக்கின்றார்.

பாதுகாப்பு அமைச்சில் நடிகை ஒருவருக்கு பதவி வழங்கி அவருக்கு இலட்சக் கணக்கான ரூபாய்களை கோட்டபே ராஜபக்ஷ சம்பளமாக வழங்கி இருக்கின்றார் என்று கூறப்படுகின்றது. இந்த நடிகை பாதுகாப்பு அமைச்சில் பார்த்த வேலை என்ன என்று அங்குள்ள அதிகாரிகளுக்கே  இது வரை புதிராக இருக்கின்றது.

மதுகமை தேயிலைத் தோட்டமொன்றில் 513 புதிய முச்சக்கர வண்டிகள் தற்போது கண்டு பிடிக்கப் பட்டிருக்கின்றது இது தேர்தல் காலங்களில் தமது அடியாட்களுக்குப் பகிர்ந்து கொடுப்பதற்ககாக கொண்டு வரப்பட்டவை என்று நம்பப்படுகின்றது.

தேர்தல் காலங்களில் கடைசி நாட்களில் ராஜபக்ஷவின் தம்பி பசில் ராஜபக்ஷ சமுர்தி நிதியத்திலிருந்து  160 கோடியை சுருட்டி இருக்கின்றார். என்று அந்த நிறுவனத்தில் குற்றம் சாட்டப்படுகின்றது. இன்று பசில் நாட்டிலிருந்து தப்பி ஓடி இருக்கின்றார். அதுவும் முக்கிய பிரமுகர்கள் நுழையும் - விஐபி சிறப்புப் வாயில் ஊடாக. இது பற்றியும் தற்போது அதிகாரிகள் விசாரிக்கப்பட இருக்கின்றார்கள்.

தேர்தல் கூட்டங்களுக்கு ஆட்களை அழைத்து வருவதாக இலங்கை போக்கு வரத்து சபையிலிருந்து பெறப்பட்ட பஸ் வண்டிகளுக்கு 18 கோடி ரூபாய்களை மஹிந்த ராஜபக்ஷ தரப்பினர் இன்னும் இ.போ.சபைக்கு வழங்க வேண்டி இருக்கின்றது என்று மதிப்பீடுகள் தெரிவிக்கின்றது. ஏற்கெனவே இந்த சபை கடமையாற்றும் தொழிலாளர்களுக்கு சம்பளம் கொடுப்பதற்கே இந்த நிறுவனம் திண்டாடிக் கொண்டிருக்கின்றது என்பது அனைவருக்கும் தெரிந்த விவகாரம். அரச ஊடகங்களில் ராஜபக்ஷவின் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளுக்கு இதே போன்று பெரும் தொகையான பணம் இன்னும் வழங்கப்படாமல் இருக்கின்றது என்று தெரிகின்றது. இதற்கு அதற்குப் பொறுப்பான  அதிகாரியிடம் கேள்வி கேட்கலாம் என்று தேடிப் பார்த்தால் ஆள் நாட்டிலிருந்து தற்போது தப்பியோடி இருக்கின்றார் என்று கூறப்படுகின்றது.    

ராஜபக்ஷக்களுக்கு சட்ட விரோதமான முறையில் உதவி பண்ணிக் கொண்டிருந்த  அதிகாரிகள் அரசியல்வாதிகள் என்று இதுவரை 80க்கும் மேற்பட்டவர்கள் வெளி நாடுகளுக்குத் தப்பியோடி இருக்கின்றார்கள் அல்லது தலைமறைவாகி இருக்கின்றார்கள். ராஜபக்ஷ அமைச்சரவையில் ஊழல் பண்ணிய 20 அமைச்சர்கள் மற்றும், அவர்கள் புரிந்த ஊழல்கள் தொடர்பான  தகவல்கள் தற்போது நடவடிக்கைகளுக்காக தயார் நிலையில் இருக்கின்றது. இதிலுள்ள வேடிக்கை என்னவென்றால் மைத்திரி அமைச்சரவையில் உள்ள இருவரது பெயர்களும் இதில் அடங்கி இருக்கின்றது என்று ஒரு தகவல் தெரிவிக்கின்றது.

ராஜபக்ஷவின் புகழ்பாடிக் கொண்டிருந்த அரச ஊடகங்களே இன்று ராஜபக்ஷ கோட்டைக்குள் நடந்த அட்டகசங்கள் பற்றிய பட்டியல்களைத் தப்போது வாசித்துக் கொண்டிருக்கின்றது. புகழ் பாடிய ஊடகங்களே அவரை இன்று தூற்றித் தள்ளுகின்றது.

ராஜபக்ஷ புதல்வர்கள் மீதான பாலியல் குற்றச்சாட்டுக்களை இணையத் தளங்கள் அட்டகாசமாக காட்சிப் படுத்திக் கொண்டிருக்கின்றது. இவை எல்லாவற்றிற்கும் மேலாக பாராளுமன்ற உறுப்பினரும் ராஜபக்ஷவின் சிரேஸ்ட புதல்வருமான நாமல் ராஜபக்ஷவின் சிபார்சின் பேரில் மாணவி ஒருவருக்குப் பல்கலைக் கழகப் பிரவேசம் வழங்கப்பட்டிருப்பது இலங்கை பல்கலைக் கழகங்கள் வரலாற்றில் ஒரு கரைபடிந்த சம்பவமாக இருந்து வருகின்றது. இது பற்றியும் தற்போது கேள்விகள் எழுப்பப்பட்டுக் கொண்டிருக்கின்றது இதுவும் ஆசியாவின் ஒரு ஆச்சர்யம்தான்.

ராஜபக்ஷவின் புதல்வர்கள் பாவித்த விமானங்கள், கார்கள், குதிரைகள், போனிகள் என்று தற்போது கண்டு பிடிக்கப் பட்டுக் கொண்டிருக்கின்றது. ஓரிடத்தில் புதிதாக நான்கு போனிக்கள் இருப்பது தொடர்பான தகவல் கிடைத்து. அது எப்படி அங்கு வந்து சேர்ந்தது என்று தேடிப் பார்த்த போது ஜனாதிபதி மாளிகையில் வேலை பார்க்கின்ற ஒருவர் தனக்கு இதனைக் கொண்டு வந்து கொடுத்ததாகவும் தான் அதனை வெறும் 80000 ரூபாய்கள் கொடுத்து கொள்வனவு செய்ததாகவும் அதனை வைத்திருந்தவர் குறிப்பிடுகின்றார். ஒரு முஸ்லிம் ரகர் விளையாட்டு வீரரின் கொலை தொடர்பாகவும் ராஜபக்ஷவின்  புதல்வர் ஒருவர் மீது கை நீட்டப்படுகின்றது. அலரி மாளிகையில் 500 கோடி ரூபாய்கள் வரை பெறுமதியான உள்நாட்டு வெளி நாட்டு நாணயங்கள் விட்டுச் செல்லப்பட்டிருந்தது என்று முன்பு செய்திகள் வெளி வந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இதற்குப் புறம்பாகவும் ராஜபக்ஷ கேட்டையின் பாதுகாவலர்களாக இருந்தவர்ககள் தமது பட்டம் பதவிகளைப் பாவித்து சட்ட விரோத நடவடிக்கைகளில் நிறையவே ஈடுபட்டிருக்கின்றார்கள். இதற்கு நல்லதொரு உதாரணம் அமைச்சர் விமல் வீரவன்சவின் மனைவி சசி வீரவன்ச தனது பிறந்த திகதியை மாற்றி கடவுச்சீட்டைப் பெற்றிருக்கின்றார். ஒரு கடவுச் சீட்டில் அவரது பிறந்த திகதி 1967 பெப்பரவாரி 01 என்று குறிப்பிடப்படுகின்றது. இன்னென்றில் இது 1971 பெப்பரவாரி 01 மாற்றப்பட்டு கடவுச் சீட்டுப் பெறப்பட்டிருக்கின்றது. இதே போன்று பிள்ளைகளின் பிறப்புச் சான்றிதல்களிலும் மனைவியின் பெயரைத் திட்மிட்டு முன்னுக்குப் பின் முறனாக பதிந்து காரியம் பார்த்திருக்கின்றார்கள் தேசப்பற்றாளர் விமல் வீரவன்ச. 

இந்த மோசடி ஒருவர் சிறைவாசம் செல்வதற்குறிய குற்றமாக இருக்கின்றது. இந்த விடயம் தொடர்பாகவும் தற்போது புலனாய்வுத் துறைக்கு முறைப்பாடுகள் கொடுக்கப்பட்டிருக்கின்றது. இப்படி ஏன் நடந்திருக்கின்றது என்று தேடிப்பார்த்தால் விமல் வீரவன்சவைவிட அவரது மனைவி வயதில் மூத்தவராக (விமல் வீரவங்ச பிறப்பு 1970 மார்ச் ஏழு. மனைவி சசி 1967 பெப்ரவாரி 01) இருப்பதனால் அதனை மூடி மறைக்கவே இந்த சட்டவிரோ தில்லுல்லை அவர்கள் செய்திருக்கின்றார்கள் என்று தெரிய வருகின்றது. ராஜபக கோட்டைக்குள் இது போன்று இன்னும் எத்தனை ஆச்சர்யங்கள் நடந்திருக்கின்றதோ என்பதனைப் பொறுத்திருந்து பார்ப்போம். 
Read more ...

முஸ்லிம் சமூகத்தின் முன்னால் 2 கடமைகள் இருக்கன்றன - அப்துர் ரஹ்மான்

"இன்று நாட்டில் ஏற்பட்டிருப்பது ஒரு மாற்றம் என்பதை விடவும் ஒரு மாற்றத்திற்கான தொடக்கம் என்று கூறுவதே பொருத்தமானதாகும். இச்சந்தர்ப்பத்தில் முஸ்லிம் சமூகத்தின் முன்னால் இரண்டு கடமைகள் இருக்கன்றன. அதிலொன்று தேசியக் கடமையாகும், மற்றையது சமூகக் கடமையாகும்" என NFGGயின் தவிசாளர் அப்துர் ரஹ்மான் தெரிவித்தார்.

மாற்றத்திற்கு பங்களிப்புச் செய்த மக்களைப் பாராட்டுவோம் என்ற மகுடத்தில் NFGG நாடளாவிய ரீதியில் நடாத்திவரும் மக்கள் சந்திப்புத் தொடரில் மற்றுமொரு நிகழ்வு கடந்த 23.01.2015 அன்று அக்கரைப்பற்றில் நடைபெற்றது.

NFGG யின் தலைமைத்துவ சபை உறுப்பினர் சிராஜ் மஷூர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் உரையாற்றும் போது அப்துர்ரஹ்மான் மேலும் தெரிவித்ததாவது..

"நடக்கவே முடியாது என நினைத்திருந்த ஒரு அரசியல் மாற்றம் இப்போது நடந்திருக்கிறது. இந்த மாற்றம் நிகழாமல் மேலும் இரண்டு வருடங்களுக்கு பழைய ஆட்சியே நீடித்திருந்தால் இந்நாட்டின் நிலை என்னவாகும் என நினைத்துப் பார்க்கவே பயமாக இருக்கிறது.

இதனை ஒரு முழுமையான மாற்றம் என்று சொல்வதை விடவும் ஒரு மாற்றத்திற்கான தொடக்கம் என்று சொல்வதே பொருத்தமாகும். மஹிந்த ராஜபக்சவின் ஆட்சியில் இந்நாட்டின் நீதித்துறை, பொருளாதாரம், சட்டம் ஒழுங்கு, சமூக நல்லிணக்கம் என அத்தனை விடயங்களும் சீரழிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில்தான் இது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்ற எண்ணத்தில் பௌத்த மதகுருமார்களும், புத்தி ஜீவிகளும் களத்தில் இறங்கினர்.

எனினும், மஹிந்தவை அனுப்பி விட்டு மைத்திரியை அதிகாரக் கதிரையில் அமர்த்துவது நோக்கமாக இருக்கவில்லை. வெறும் ஆட்சிமாற்றமாக இல்லாமல் ஒரு ஆட்சி முறை மாற்றத்திற்கான தொடக்கமாகவே, மஹிந்தவை ஜனாதிபதித் தேர்தலில் தோற்க்கடிப்பதனைப் அனைவரும் பார்த்தனர்.

அந்த வகையில், ஜனாதிபதி தேர்தலின் பின்னர் எவ்வாறு அந்த நல்லாட்சியை நோக்கிய ஆட்சி முறை மாற்றம் நிகழ வேண்டும் என்பதற்கானஒரு தெளிவான திட்டப்பாதையும் வகுக்கப்பட்டது. அதனடிப்படையிலேயே மாற்றத்திற்கான ஆணையை மக்கள்வழங்கினர்.

எனவேதான் இப்போது ஏற்பட்டிருப்பதானது ஒரு முழுமையான மாற்றமின்றி மாற்றத்திற்கான தொடக்கமேயாகும் என்பதனை நாம் மறந்துவிடக்கூடாது.

இந்த சந்தர்ப்பத்தில் எம்முன்னே இரண்டு கடமைகள்இருக்கின்றன. அதிலொன்று தேசியக்கடமையாகும், மற்றையது நம் சமூகம் சார்ந்த கடமையாகும்.

அந்த வகையில்ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் நல்லாட்சியொன்றை நோக்கிய ஆட்சி மாற்றப் பயணப் பாதையின் இலக்குகளாக என்னவென்ன விடயங்கள் முன்வைக்கப்பட்டதோ அவை முறையாக நிறைவேற்றப் படுகின்றனவா..? என்பதனை நாம் பொறுப்புடன் அவதானிக்க வேண்டும். அதற்காக ஆட்சிமாற்றத்திற்கு காரணமாக அமைந்த அந்த மக்களின் விழிப்புணர்ச்சியினை தொடர்ந்தும் தக்கவைத்துக் கொள்ளவேண்டும். மக்களிடம் முன்வைக்கப்பட்ட இலக்குகள் அல்லது விடயங்கள் ஏதும் மறக்கப்பட்டால் அல்லது புறக்கனிககப்பட்டால், அதனைப் புதிய அரசாங்கத்திற்கு சுட்டிக்காட்டி அழுத்தம்கொடுப்பதும் அவற்றை நிறைவேற்றச் செய்வதுமே எமது தேசியக் கடமையாக இருக்கிறது.

அடுத்ததாக நம் சமூகம் சார்ந்த கடமை யொன்றும்இருக்கிறது. மக்களின் உணர்வுகளை மதிக்காத சர்வதிகார தலைமைகளையும் ஊழல் மோசடிகளையும் அதிகார துஸ்பிரயோகங்களையும் ஒழித்து நாட்டில் நல்லாட் சிநிலையொன்று ஏற்படுகின்ற போது அதற்கு தொடர்ச்சியாக பங்களிப்புச்செய்து அதன் நன்மைகளில் நமது சமூகமும் பங்காளியாகமாறவேண்டும். அதற்கேற்ற வகையில் நம் சமூகத்தில் அரசியல் நிலவரங்கள் மாற்றியமைக்கப்பட வேண்டும்.

இன்று நாட்டில் ஏற்படுத்தப் பட்டிருப்பது போல் ஒரு அரசியல் மாற்றம் நம் சமூகத்திலும் ஏற்படுத்தப் பட வேண்டும். அது நல்லாட்சியை நோக்கிய ஒரு புதிய அரசியல் வழிமுறையாகவும், புதிய அரசியல் கலாசாரமாகவும் ஒரு புதிய தலைமைத்துவக் கட்மைப்பாகவும் அந்த மாற்றம் உருவாகவேண்டும். இது நம் சமூகம் சார்ந்த நமது கடமையாகஇ ருக்கிறது.

எனவே ஏற்பட்டிருக்கின்ற இந்த அரசியல் சூழ்நிலைகளை ஒரு மாற்றத்திற்கான தொடர்ச்சியாக எடுத்துக் கொண்டு நமதுகடமைகளைச் செய்ய எல்லோரும் முன் வரவேண்டும்."
Read more ...

'எமது பிள்ளைகளை, தயாராக்க வேண்டும்' ஜனாதிபதி மைத்திரிபால

தொழில் நுட்பத்துறையில் எமது பிள்ளைகளை உலகளாவிய ரீதியில் போட்டிபோடக் கூடியவர்களாக உருவாக்க வேண்டியது அவசியமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

புகழ்மிக்க நீண்ட வரலாற்றில் எமது நாடு அபிவிருத்தியிலும் பொருளாதாரத்திலும் கண்டிருந்த வளர்ச் சியை முன்னுதாரண மாக்கிக் கொண்டு நாட்டில் மட்டுமன்றி உலகளாவிய ரீதியில் எமது பிள்ளைகள் போட்டி போடத் தம்மை தயார்படுத்திக் கொள்வது முக்கியம் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

“எடெக்ஸ்” “எக்போ- 2015” கண்காட்சி நேற்று கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ஆரம்பமானது. இதன் ஆரம்ப நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து உரை யாற்றுகையிலேயே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார். அமைச்சர்கள் அகில விராஜ் காரியவசம், ரவூப் ஹக்கீம், ரவி கருணாநாயக்க, கயந்த கருணாதிலக்க உட்பட முக்கியஸ்தர்கள் கலந்து கொண்ட இந்நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய ஜனாதிபதி:-

எமக்கு தொழில் நுட்பத்துறையோடுள்ள தொடர்பில் தொழில் நுட்பத்தில் பிள்ளைகள் உயர்வது போன்று அதற்கு வெளியிலும் சுற்றாடலோடும், இயற்கை வளங்களோடும் தொடர்புபட்டவர்களாக வேண்டியது முக்கியமாகும். இயற்கையை நேசிப்பவர்களாக உருவாக வேண்டும்.

கொழும்பு ரோயல் கல்லூரி சம்பிரதாயங்களைக் கடந்து அதற்கு வெளியிலும் சிறப்பாக செயற்பட்டு வருகிறது. பாடசாலைக் கல்வியிலும் சம்பிரதாயங்களுக்கு மேலதிகமாக சமூக ரீதியில் மக்கள் நலன் என்ற ரீதியில் செயற்பட்டு வருகின்றது. சமூக நலன்புரி விடயங்களிலும் முன்னுதாரணமாகத் திகழ்கிறது. நான் ஜனாதிபதியாகப் பதவியேற்று இரண்டு வாரங்களே கழிந்துள்ள நிலையில் பாடசாலை சம்பந்தமான நிகழ்வில் கலந்து கொள்வது இதுவே முதற்தடவையாகும்.

கொழும்பு ரோயல் கல்லூரி பழைய மாணவர்கள் ஏற்பாடு செய்துள்ள இந்த கண்காட்சியை பொலனறுவை ரோயல் கல்லூரியின் பழைய மாணவனான நான் அங்குரார்ப்பணம் செய்து வைப்பதில் மகிழ்ச்சியடைகின்றேன்.

நான் ரோயல் கல்லூரியை மதிப்பவன், நேசிப்பவன், நெருங்கிய தொடர்புகளைக் கொண்டவன். தற்போது நவீன உலகம் நவீன தொழில் நுட்ப வளர்ச்சியின் காலம். இது புதிய பரம்பரைக்கு சிறந்த பிரவேசமாக அமையும். இந்தக் கண்காட்சியானது எமது பிள்ளைகள் சர்வதேச மட்டத்தில் போட்டியிடுவதற்கு ஊக்குவிக்கும்.

சில பெற்றோர்கள் தமது பிள்ளைகள் பற்றிச் சிந்திக்கும் போது தமது பிள்ளைகளுக்கு வகுப்பிலேயே போட்டி இருப்பதாகக் கருத்துகின்றனர்.

இன்னும் சில பெற்றோர்கள் நினைக்கின்றார்கள் தமது பிள்ளைகளுக்கு வீட்டிலேயே போட்டி இருப்பதாக. எனினும் அனைத்துத் துறைகளிலும் போட்டி என்று வருகையில் எமது பிள்ளைகள் உலகை வெல்லக்கூடியவர்களாக உருவாக வேண்டும்.

எமது நாட்டின் புகழ்மிக்க நீண்ட கால வரலாற்றில் பொருளாதார ரீதியில் கலாசார ரீதியில் காணப்பட்ட வளர்ச்சி பற்றி சிந்திக்க வேண்டியுள்ளது.

நவீன உலகம் மற்றும் நவீன தொழில் நுட்பத்தை நோக்கிய பயணத்தில் நாம் நீண்ட தூரம் போக வேண்டியுள்ளது. முதலில் அதற்காக எமது பிள்ளைகளை தயாராக்க வேண்டும். இதில் பாடசாலை மற்றும் பெற்றோர்களின் பொறுப்புகள் முக்கியமாகும்.

கல்வித்துறை போன்றே தொழில் சந்தையில் ஏனைய சமூகங்கள் போன்று உயர்வது எமது பிள்ளைகளுக்கான அவசியமாகிறது என்றும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார். “தேசத்தின் பிள்ளைகளை சர்வதேச போட்டிகளுக்கு ஊக்கமூட்டும் இந்தத் தேசியக் கண்காட்சியை ஜனாதிபதி பார்வையிட்டதுடன் கண்காட்சியைப் பார்வையிட வருகை தந்திருந்த மாணவர்களுடனும் அளவளாவினார்.
Read more ...

சஜித் பிரேமதாஸாவின் அதிரடிகள் தொடருகிறது

-அஸ்ரப் ஏ சமத்-

வடக்கு கிழக்கு மலையகம் உள்ள சகல பிரதேசங்களும் எனது அமைச்சின் கீழ வருகின்ற வீடமைப்பு அபிவிருத்தி மற்றும் சமுா்த்தி திவிநகும சகல நடவடிக்கைகளும் சமமாக பங்கீட்டு அப்பிரதேச அபிவிருத்திகள் நடைபெறவேண்டும். என புதிய அமைச்சா் சஜித் பிரேமதாச கண்டிப்பான உத்தரவு.   வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் 24 மாவட்ட முகாமையாளா்கள், சமுா்த்தி அதிகார சபைகளின் சகல முகாமையாளா்களையும் நேற்று கொழும்பு புதிய நகர மண்டபத்திற்கு அழைக்கப்பட்டிருந்தனா்.

எனது அமைச்சின் கீழ் வருகின்ற எந்தவொரு அதிகாரியும் இனப்பாகுபாடு, அபிவிருத்தியில் சமதா்மம், இலஞ்சம், தாமதம் மக்களை அளக்கழித்தல், என்ற வகையில் எனக்கு முறைப்பாடுகள் கிடைப்பின் உடன் நடவடிக்கை எடுக்கப்படும். என்னோடு வேலைசெய்வதற்கு காலை 08 .30 பி.பகல் 04.30 என்ற அலுவலக நேரத்தை கடைப்பிடிக்க வேண்டாம். நேற்று இரவு நான் கடமையேற்று 11.30 இரவு 12.00 மணிவரையும் அமைச்சில் இருந்து மக்களை சந்தித்தேன். இன்று காலை 8 மணியுடன் உங்களை சந்திக்கின்றேன். மேலும் இன்று இரவு 10 மணிவரை அதிகாரிகளுடன் எதிா்நோக்கும் பிரச்சினைகள் செய்யவேண்டிய தீா்வுகள், கலந்துறையாடப்படும்.
Read more ...

Friday, January 23, 2015

ராஜபக்ச கள்வர்கள் எனது 100 பில்லியனுக்கும் மேற்பட்ட சொத்துக்களை சூறையாடினார்கள் - லலித் கொத்தலாவ

-அஸ்ரப் ஏ சமத்-

சிலின்கோ தலைவர் லலித் கொத்தலாவ சிறையில் இருந்து ஊடகவியலாளர்கள் சந்திப்பு 

ராஜபக்ச கள்வர்கள்  எனது 100க்கும் மேற்பட்ட பில்லியன் சொத்துக்களை சூறையாடினார்கள். என்னையும் சிறையில் அடைத்தார்கள் எனது செயலான் வங்கி,  பினாஸ் கம்பணிகளை பறித்தெடுத்தார்கள். அவர்களது ஆதரவாளர்களை அவ் கம்பணிகளின் தலைவர்களாக நியமித்தார்கள்.  கொள்ளுப்பிட்டியில் ரண்முத்து ஹோட்டலுக்கு அருகில் நான் கொண்டுவந்த ஹாயத் ரீஜென்சி கோட்டலுக்காக 10 பில்லியன் முதலிட்டேன். அதனையும் பசில் ராஜபக்ச தனது பெயருக்கு மாற்றியுள்ளார். என சிலின்கோ தலைவர் லலித் கொத்தலாவா தெரிவிப்பு.

எனக்கு உண்மையில் கோல்டன் கீ பண முதலீட்டில் 26 பில்லியன் நஸ்டம் ஏற்பட்டது. உண்மை முதலிட்டவர்களுக்கு 3 வருடத்திற்குள் பணம செலுத்துவதாக தெரிவித்தும் 200 மில்லியன் ருபா செலுத்தியுள்ளேன். அதில் முதலிட்டவர்களோ அல்லது கம்பணிக்கோ பிரச்சினை இல்லை எனது கம்பணிகளையும் பணங்களையும் சூரையாடுவதற்கு இலங்கை மத்திய வங்கியின் தலைவர் மற்றும் ராஜபக்ச சகோதரர்களுக்கே மிக ஆர்வம் இருந்தது.

எனக்கு 450 சிலின்கோ சம்பந்தமான கம்பணிகள் 45ஆயிரம் ஊழியர்கள், வெளிநாட்டில் 15 கம்பணிகள் உள்ளன.  ஆனால் கோல்டன் கம்பணியில் தான் 13 பில்லியன் நஸ்டம் ஏற்பட்டது. என சிலின்கோ தலைவர் லலித் கொத்தலாவ தெரிவித்தார்

Read more ...

மைத்திரியின் ஒருநாள் செலவும், மஹிந்தவின் ஒருநாள் செலவும்

புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா நாளாந்தம்  2850 ரூபா முதல்  8000 ரூபா வரைதான் செலவு செய்கின்றார். 
 
இதேவேளை முன்னால் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஆட்சியில் இருந்த போது ஒருநாள் செலவு  2 கோடியாக இருந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read more ...

குடும்ப ஆட்சி தோற்கடிக்கப்பட்டுள்ள போதிலும், கள்வர்கள் தொடர்ந்தும் இருக்கின்றார்கள் - JVP

குடும்ப ஆட்சியை இல்லாமல் செய்த போதிலும் கள்வர்கள் தொடர்ந்தும் இருக்கின்றார்கள் என ஜே.வி.பி.யின் மாகாணசபை உறுப்பினர் கே.டி.லால்காந்த தெரிவித்துள்ளார்.

ஊழல் மோசடிகளில் ஈடுபட்டவர்கள் எத்தனை பேர் பிடிக்கப்பட்டுள்ளனர் என ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி குடும்ப ஆட்சியை இல்லாமல் செய்ய வேண்டுமென நாம் மக்களிடம் கடந்த ஜனாதிபதி தேர்தலில் கோரியிருந்தோம். ஜனநாயகத்தை நிலைநாட்ட அணி திரள்வோம் என கோரியிருந்தோம்.

ஜனாதிபதியின் குடும்ப ஆட்சி இன்று தோற்கடிக்கப்பட்டுள்ளது. எனினும் ஏனைய விடயங்கள் இன்னமும் அப்படியே இருக்கின்றது. கள்வர்கள் தொடர்ந்தும் இருக்கின்றார்கள்.

மக்களுக்கு மற்றுமொரு வேலை பாக்கி இருக்கின்றது. எதிர்வரும் பொதுத் தேர்தலில் தூய்மையான அரசில்வாதிகளுக்கு மட்டுமே மக்கள் சந்தர்ப்பம் அளிக்க வேண்டும்.

அதனைச் செய்ததன் பின்னரே அடுத்த கட்ட நடவடிக்கைகளை எடுக்க முடியும்.

ஊழல் மோசடிகளில் ஈடுபட்டவர்கள் ஊழல் மோசடிகளில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக செயற்பட மாட்டார்கள். கள்வர்கள் கள்வர்களைப் பிடிக்க மாட்டார்கள்.

ஊழல் மோசடிகாரர்கள், கள்வர்கள் அங்கம் வகிக்கும் நாடாளுமன்றை மக்கள் தூய்மைப்படுத்துவார்கள் என லால்காந்த தெரிவித்துள்ளார்.

Read more ...

மைத்திரிபால சிறிசேன போன்ற, அரச தலைவரை வரலாற்றில் என்றும் சந்தித்ததில்லை - பாப்பரசர்


இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை போன்ற எளிமையான மனிதரை தான் வாழ்க்கையில் சந்தித்ததில்லை என பாப்பரசர் பிரான்சிஸ் திருத்தந்தை தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால மீது தமக்கு புதுமையான அன்பும், கௌரவமும் ஏற்பட்டதாக புனித பாப்பரசர் தன்னிடம் கூறியதாக கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

வெளிவிவகார அமைச்சில் நடைபெற்ற விசேட சந்திப்பொன்றிலேயே கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை இதனைத் தெரிவித்துள்ளார்.

பாப்பரசரை வரவேற்பதற்காக நடத்தப்பட்ட விழாக்களுக்காக அர்ப்பணிப்புடன் செயல்பட்ட அதிகாரிகளுக்கு நன்றி செலுத்துவதற்காக வெளிவிவகார அமைச்சில் விசேட கூட்டமொன்று நடைபெற்றது.

வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க ஆகியோரின் தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெற்றது.

இலங்கைக்கு பயணித்ததில் தாம் பெருமகிழ்ச்சியடைந்ததாக புனித பாப்பரசர் தன்னிடம் தெரிவித்ததாக மெல்கம் ரஞ்சித் ஆண்டகை மேலும் குறிப்பிட்டார்.

உலகில் பல நாடுகளுக்கு தான் பயணம் செய்துள்ளதாகவும், அரச தலைவர்கள் உள்ளிட்ட ஏராளமான முக்கியஸ்தர்களைச் சந்தித்துள்ளதாகவும், எனினும், இவ்வாறானதொரு அரச தலைவரை வரலாற்றில் என்றும் சந்தித்ததில்லை எனவும் புனித பாப்பரசர் தெரிவித்ததாக மெல்கம் ரஞ்சித் ஆண்டகை மேலும் கூறினார்.
Read more ...

புத்தளம் சாஹிரா தேசிய கல்லூரியின், சாதனை தொடரட்டும்..!

டோக்கியோ சீமெந்து நிறுவனத்தின் அனுசரணையுடன் சுவர்ணவாஹினி தொலைக் காட்சி நிறுவனம் கல்வியமைச்சுடன் இணைந்து இரண்டாவது தடவையாக அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையே நாடாத்தும் அறிவுப் போட்டியின்(2014) இரண்டாம் சுற்று இன்று(23.1.2015) களனி சரசவி கலையரங்கத்தில் இடம் பெற்ற போது புத்தளம் சாஹிரா தேசிய கல்லூரி மாணவர்கள் (75 புள்ளிகள்) தம்முடன் போட்டியிட்ட காலி ரிச்மண்ட் கல்லூரி(55 புள்ளிகள்) கொழும்பு விஷாகா கல்லூரி (45 புள்ளிகள்) வத்தளை சாந்த பெண்கள் கல்லூர(25 புள்ளிகள்) ஆகியவற்றை வெற்றி கொண்டு முதல் நிலையை அடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்.

புத்தளம் சாஹிரா தேசிய கல்லூரி இதன் மூலம் விரைவில் நடை பெறவுள்ள மூன்றாம் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. அந்தப் போட்டியில் 8 தேசிய மட்டத்தில் தலை சிறந்த பாடசாலைகளுடன் சாஹிரா போட்டியிட உள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதுவரை திறமைக் காட்டிய சாஹிரா ஒன்றரை இலட்சம் ரூபாவைப் பெறுவதற்கும் தகுதி பெற்றுள்ளது. மிகத் திறமைக் காட்டிய சாஹிராவின் மாணவ மணிகளுக்கு இதயபூர்வமான வாழ்த்துக்களும்,பாராட்டுக்களும் உரித்தாகட்டும். அல்லாஹ் தங்களுக்கு மென்மேலும் அறிவை அதிகப்படுத்தித் தருவானாக.

Read more ...

'புறா பிரச்சினை' ஒரு பிள்ளையின் தந்தையான, முஹம்மத் பஹாத் வெட்டிக்கொலை

மள்வான ரக்ஷபான பிரதேசத்தில் புறாக்கள் சம்பந்தமாக ஏற்பட்ட தகராறின் காரணமாக தனது சகோதரியின் கணவரைக் கொலை செய்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

முஹம்மத் ஹுஸைன் முஹம்மத் பஹாத் (26 வயது) என்ற ஒரு பிள்ளை யின் தந்தையே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். வியாழன் (22) மாலை இவருக்கும் இவருடைய மனைவியின் இளைய சகோதரனுக்கும் இடையே ஏற்பட்ட புறாக்கள் சம்பந்தமான பிரச்சினை நீண்டு செல்லவே இளைய சகோதரன் இவரை கூரிய ஆயுதமொன் றினால் குத்திக்கொலை செய்துள்ளார்.

சம்பவம் நடந்த இடத்திற்கு மஹர நீதிமன்ற நீதவான் மஹிந்த பிரபாத் ரணசிங்க சென்று விசாரணைகளை மேற்கொண்டு பிரேத பரிசோதனைக்காக ராகம பிரதான வைத்தியசாலைக்கு அனுப்புமாறு கட்டளையிட்டார். சம்பவம் தொடர்பாக இறந்தவரின் மைத்துனர் பியகம பொலிஸாரினால் கைது செய்யப் பட்டுள்ளார்.
Read more ...

சுதந்திரக் கட்சியின் தலைவர் மஹிந்த ராஜபக்ஸதான் - தேர்தல் ஆணையாளர்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக மஹிந்த ராஜபக்ஸவே இன்னமும் திகழ்வதாக தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினதும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பினதும் தலைவராக மஹிந்த ராஜபக்ஸவே பதவி வகிப்பதாகவே தம்மிடம் ஆவணங்கள் காணப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.

கட்சியின் தலைமையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக ஊடகங்களில் தகவல் வெளியிடப்பட்ட போதிலும் இதுவரையில் அது குறித்த உத்தியோகபூர்வ ஆவணங்கள் தேர்தல் செயலகத்திற்கு அனுப்பி வைக்கப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

சுமார் பத்து நாட்ளுக்கு முன்னதாக மஹிந்த ராஜபக்ஸ சுதந்திரக் கட்சியின் தலைவர் எனவும், அனுர பிரியதர்சன யாபா பொதுச் செயலாளர் எனவும் கடிதமொன்று கிடைக்கப்பெற்றது என அவர் தெரிவித்துள்ளார்.

உத்தியோகபூர்வமாக தலைமப் பதவியில் மாற்றம் குறித்து அறிவிக்கப்படும் வரையில், மஹிந்த ராஜபக்ஸவே கூட்டமைப்பினதும், சுதந்திரக் கட்சியினதும் தலைவராக கருதப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பதவியில் மாற்றம் ஏற்பட்டிருந்தால் சுதந்திரக் கட்சி அதனை அறிவிக்கும் என எதிர்பர்ர்ப்பதாகத் தெரிவித்துள்ளார்.
Read more ...

அப்துல்லாவின் ஜனாஸா நல்லடக்கம் (வீடியோ இணைப்பு)


அப்துல்லா  மன்னரின் நல்லடக்கம் வெள்ளிகிழமை மாலை மிகவும் எளிமையாக நடைபெற்றது. நல்லடக்கத்துக்கு முன்னதாக அவரது உடல் ரியாதிலுள்ள ஒரு பள்ளிவாசலுக்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கு பிரார்த்தனைகள் நடைபெற்றன.



https://www.youtube.com/watch?v=OWSBnGJyMx8
Read more ...

சவூதி அரேபியாவுக்கு படையெடுத்த வெளிநாட்டு தலைவர்கள் (படங்கள் இணைப்பு)


Arab and other foreign leaders are seen arriving in Riyadh on Friday to pay their last respects to Custodian of the Two Holy Mosques King Abdullah. They include:
1. Bahrain’s King Hamad bin Isa Al Khalifa of Bahrain;  2. Sheikh Sabah Al-Ahmad Al-Jaber Al-Sabah, Emir of Kuwait;  3. Sheikh Tamim Bin Hamad Al Thani, Emir of Qatar;  4. Egyptian Prime Minister Ibrahim Mahlab;  5. Algerian National Assembly Speaker Abdul Qadir bin Saleh; 6. Oman’s Deputy Prime Minister for Cabinet Affairs Fahd bin Mahmoud Al Said;  7. Sudan President Omar Hassan Ahmad al-Bashir; 
8. Turkish President Recep Tayyip Erdogan; and  9. Ethiopian Prime Minister Haile Mariam Dessalines. (SPA photos)










Read more ...

அப்துலல்லாவின் ஜனாஸா நல்லடக்கம் (வீடியோ இணைப்பு)


மன்னர் அப்துல்லா  மன்னரின் நல்லடக்கம் வெள்ளிகிழமை மாலை மிகவும் எளிமையாக நடைபெற்றது. நல்லடக்கத்துக்கு முன்னதாக அவரது உடல் ரியாதிலுள்ள ஒரு பள்ளிவாசலுக்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கு பிரார்த்தனைகள் நடைபெற்றன.



https://www.youtube.com/watch?v=OWSBnGJyMx8
Read more ...

Thursday, January 22, 2015

வெலே சுதாவின் போதை வியாபாரத்துடன் 600 பெண்கள் தொடர்பு, ஏற்கனவே 300 பேர் கைது

இலங்கையில் பாரிய ஹெரோயின் போதைப் பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்தமை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள வெலே சுதா என அழைக்கப்படும் வசந்த குமார என்பவரின் போதைப் பொருள் வியாபாரத்துடன் சம்பந்தப்பட்ட சுமார் 600 பெண்கள் இருப்பதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இவர்கள் கொழும்பு மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் இருப்பதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

வெலே சுதாவின் மனைவியான கயனி அவரது சகோதரியான முத்து ஆகியோரும் இதில் அடங்குகின்றனர்.

வெலே சுதாவின் மனைவி மற்றும் தாயார் ஆகியோர் போதைப் பொருள் குற்றச்சாட்டில் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த பல வருடங்களாக வெலே சுதாவின் ஹெரோயின் வியாபாரத்துடன் சம்பந்தப்பட்ட 300 பெண்கள் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

சிறையில் உள்ள இந்த பெண்களுக்கு வெலே சுதா தினமும் உணவை விநியோகித்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

வெலே சுதா கைது செய்யப்பட்டுள்ள போதிலும் போதைப் பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டவர்கள் மற்றும் அதன் பின்னணியில் இருக்கும் அரசியல்வாதிகள் இன்னும் சுதந்திரமாக நடமாடி வருகின்றனர்.
Read more ...

சவூதிஅரேபிய மன்னர் அப்துல்லாஹ் வபாத் - உலகத் தலைவர்கள் அனுதாபம், அடுத்த மன்னராக சல்மான்


சவூதிஅரேபிய மன்னர் அப்துல்லாஹ் பின் அப்துல் அஸீஸ் இன்று அதிகாலை காலமானார். மரணிக்கும்போது அவருக்கு வயது  90. 

மன்னர் அப்துல்லாஹ், மருத்துவமனையில் உயிர் நீத்ததாக அந்நாட்டுத் தொலைக்காட்சி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.

நுரையீரல் நோய் காரணமாக அவர் கடந்த சில வாரங்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். 

கடந்த 2005 இல் மன்னராக பொறுப்பேற்ற அப்துல்லாஹ்,  கடந்த பல வாரங்களாக, நுரையீரல் தொற்று நோய் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். 

இந்நிலையில் சிகிச்சை பலன் இன்றி இன்று அதிகாலை சவூதி நேரப்படி ஒரு மணியளவில் காலமானார் என அந்நாட்டு தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும் அடுத்த மன்னராக, தற்போது இளவரசராக இருக்கும் சல்மான் பின் அப்துல்அஸீஸ் ( வயது 79 ) முடி சூட்டப்படுவார் என்றும்  புதிய இளவரசராக முக்ரின் பொறுப்பேற்பார் என்றும் அந்நாட்டு தொலைக்காட்சி செய்தி தெரிவிக்கிறது.

தமது அரசாட்சி காலத்தில் அவர் அமெரிக்காவுடனும் பிரிட்டனுடனும் வலுவான உறவை நிலைநட்டினார். சவூதி அரேபியாவில் பெண்கள் வாக்குரிமை  முதன்முறையாக அளிக்கப்பட்டதும் அவரது அரசில்தான்.

மன்னர் அப்துல்லா அமெரிக்காவின் நெருங்கிய நண்பர் என்றும் மத்திய கிழக்கை அமைதிக்கு இட்டிச் செல்ல பல தைரியமான செயல்களை மேற்கொண்டார் என்றும் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இஸ்லாமிய உலகின் மிகப் பெரிய சக்தியாக திகழ்ந்தவர் அப்துல்லாஹ். அவரது துணிவான நடவடிக்கைகளும், கண்ணியமான நட்புறவும் பாராட்டுதலுக்குரியது. மத்திய கிழக்கு பகுதிகளில் பாதுகாப்பு மற்றும் ஸ்திரதன்மைக்கு ஒரு சக்தியாக அவர் விளங்கினார். அமெரிக்க-சவூதி அரேபிய உறவிற்கு பலமாக திகழ்ந்தவர் அப்துல்லா. அவரது மறைவு வேதனை அளிக்கிறது என்றும் ஒபாமா தெரிவித்துள்ளார்.
Read more ...

சுனாமியால் பாதிக்கப்பட்ட முஸ்லிம் சகோதாரியின் குமுறல் - அதிகாரிகள் கவனிப்பார்களா..?

சுனாமியும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உயர்  அதிகாரிகளால் வழங்கப்பட்ட  ஊழல்களும் 

26.12.2004 ஆழிப்பேரலை  காரணாமாக  மருதமுனை  மண்ணில் அழிவுகள் அதிகமாகவே காணப்பட்டது இது அனைருக்கும்  தெரிந்த  விடயமே அனால் அவர்களுக்கு இழைக்கப்பட்ட  அநீதி  யாவரும்  அறியாத  விடயமே!!

  ஆழிப்பேரலையால்  பாதிக்கப்பட்டு தன்  வீடு தன்னுடைய பொருளாதாரம் உடமை தனது 13  குழந்தை  உட்பட அனைத்தையும்  இழந்து அநாதரவாக உறவினர்களுடன்  தனது  வாழ்க்கையை  கழித்து  பின் சில  நிறுவனங்கள்  மூலம்  சீலை வீடுகள்  வழங்கப்பட்டு அதில்  4 வருடங்கள்  தனது  வாழ்க்கையை  கழித்து பின் சில  வெளிநாட்டு உறவினர்களினால் நன்கொடையாக பணம்  பெற்று  அதன் மூலம் ஒரு  சிறு  காணித்  துண்டை  பெற்று  பிரான்ஸ்  நிறுவனத்தின்  உதவியுடன் ஒரு  வீடை  கட்டினேன் வீடு  முழுமை  பெறாத  நிலையில் அந்  நிறுவனம் தனது  கால  எல்லையை முடிந்த  நிலையில்  அவர்கள்  நாடு திரும்பினார்கள் வீடு  கட்டுவதற்க்கு  போறுப்பளிக்கப்பட்டவர்களும் வீட்டை  கட்டி  முடித்து  தராமல் சென்று விட்டனர் சுனாமியால் 65 மீட்டருக்குள்  பாதிக்கப்பட்டவர்களுக்கு  அப்போதைய அரசாங்கம் 2005ல் ஒவ்வொரு  குடும்பத்துக்கும் தலா Rs 250.000 கொடுப்பதற்க்காக அறிவித்தது.

  இதனை  பெற்றுத்தருவதாக கூறி எங்களிடம்  எங்களது கிராம  நிலதாரி கையொப்பம் கேட்டு  நாங்களும் கையோப்பமிட்டோம் இப் பணத்தை நம்பி நான் மறுபாடியும்  உறவினர்களிடம் கடன் பெற்று எனது  வீட்டை  முழுமையாக  கட்டி முடித்தேன் அனால் ஓரிரு  மாதங்களுக்கு பிறகு  அரசாங்கம் அறிவித்த அந்த பணம்  எங்களுக்கு அரசாங்கத்தால்  தரப்படவில்லை  என  எங்களது கிராம  நிலதாரி மற்றும் AGA கூறினார்கள் அனால் பணம்  கொடுக்கப்பட்டதட்க்கான  ஆதாரம்  என்னிடம்  கையிறுப்பில்  உள்ளது எனது வறுமையின் காரணாமாக நான்  எனது இருப்பிடத்தை விற்று அதன் மூலம் எனது  கடன்களை  செலுத்தி  தற்ப்பொழுது எனது உறவினர்களுடன்  நான் சொந்த  வீடு  இல்லாமல்  வசித்து  வருகிறேன்.

 ஆனால் எங்களுக்காக  மருதமுனையி மெட்டு வட்டையில் 178 வீடுகள்  கட்டப்பட்டு அதில் 100 வீடுகள் சுனாமியால்  பாதிக்கப்படாதவர்களுக்கும் கூட வழங்கப்பட்டது அனால் சுனாமியில் நேரடியாக  பாதிக்கப்பட்ட எனக்கு எந்த வித நஷ்ட்ட ஈடோ அல்லது  வீடோ  இதுவரை அரசாங்கத்தால் கிடைக்க வில்லை  என்னைப் போல் எனக்குத்  தெரிந்து இன்னும் 23 குடும்பங்களும்  எனக்குத்  தெரியாமல் இன்னும் சில குடும்பங்களும் சில குடும்பங்களும்  இருக்கின்றனர்  

65 மீட்டர்  தான் என்னைப்போல் மிக மோசமாக பாதிக்கப்பட்ட  பகுதி 65 மீட்டர் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கட்டப்பட்ட வீடு தரமற்ற வீடாக  காணப்படுகிறது 
சுனாமியால் பாதிக்கப்பட்ட உயிர் உடமை அனைத்தையும் இழந்த 65 மீட்டர் வாழ் மக்களின் அணைத்து உரிமைகளையும்   உரியமுறையில் அவர்களுடைய கஷ்ட்ட நஸ்ட்டங்களை நிவர்த்தி செய்து  வழமையான வாழ்க்கைக்கு திரும்புவ்தட்க்கு இபோதைய அதி மேதகு ஜனாதிபதி மைத்திரிப்பால சிறிசேன அவர்களின் கவனத்திற்க்கு கொண்டு செல்லுமாறும் பாதிக்கப்பட்ட அணைத்து மக்களும் ஜனாதிபதி அவர்களின் தலையீட்டில் அவர்களுக்கு மறுவாழ்வு கிடைக்குமென ஆவலுடன் என்னைப்போண்ற  பாதிக்கப்பட்டவர்கள்  எதிர்பார்ப்புடன் காத்துக்கொண்டு இருக்கிறார்கள் 

சக்தி உள்ளவர்கள் இம் மக்களின் பிரச்சனையை அறிந்து இம் மக்களின் தேவையை நிறைவேற்றித் தருமாறு மிகவும் தாழ்மயுடன் கேட்டுக் கொள்கிறோம்

M.H சித்தி நஹார்  
மசூர் மௌலான வீட்டு திட்டம் 
635 /மசூர் மௌலான வீதி 
மருதமுனை 3 



Read more ...