Friday, January 23, 2015

புத்தளம் சாஹிரா தேசிய கல்லூரியின், சாதனை தொடரட்டும்..!

டோக்கியோ சீமெந்து நிறுவனத்தின் அனுசரணையுடன் சுவர்ணவாஹினி தொலைக் காட்சி நிறுவனம் கல்வியமைச்சுடன் இணைந்து இரண்டாவது தடவையாக அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையே நாடாத்தும் அறிவுப் போட்டியின்(2014) இரண்டாம் சுற்று இன்று(23.1.2015) களனி சரசவி கலையரங்கத்தில் இடம் பெற்ற போது புத்தளம் சாஹிரா தேசிய கல்லூரி மாணவர்கள் (75 புள்ளிகள்) தம்முடன் போட்டியிட்ட காலி ரிச்மண்ட் கல்லூரி(55 புள்ளிகள்) கொழும்பு விஷாகா கல்லூரி (45 புள்ளிகள்) வத்தளை சாந்த பெண்கள் கல்லூர(25 புள்ளிகள்) ஆகியவற்றை வெற்றி கொண்டு முதல் நிலையை அடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்.

புத்தளம் சாஹிரா தேசிய கல்லூரி இதன் மூலம் விரைவில் நடை பெறவுள்ள மூன்றாம் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. அந்தப் போட்டியில் 8 தேசிய மட்டத்தில் தலை சிறந்த பாடசாலைகளுடன் சாஹிரா போட்டியிட உள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதுவரை திறமைக் காட்டிய சாஹிரா ஒன்றரை இலட்சம் ரூபாவைப் பெறுவதற்கும் தகுதி பெற்றுள்ளது. மிகத் திறமைக் காட்டிய சாஹிராவின் மாணவ மணிகளுக்கு இதயபூர்வமான வாழ்த்துக்களும்,பாராட்டுக்களும் உரித்தாகட்டும். அல்லாஹ் தங்களுக்கு மென்மேலும் அறிவை அதிகப்படுத்தித் தருவானாக.

No comments:

Post a Comment