எகிப்தில் பதவி கவிழ்க்கப்பட்ட ஜனாதிபதி மொஹமட் முர்சி தான் தொடர்ந்தும் ஜனாதிபதியென நீதிமன்றத்தில் மீண்டும் ஒருமுறை வலியுறுத்தியுள்ளார்.
முர்சி மீதான குற்றச்சாட்டு களில் ஒன்றான உளவு பார்த்ததான குற்றச்சாட்டின் வழ க்கு விசாரணை கடந்த ஞாயிறன்று நீதிமன்றத்தில் இடம்பெற்றது. இதில் முர்சியும் ஆஜர் படுத்தப்பட்டிருந் தார்.
சிறைக் கைதிகளின் வெள்ளையாடையுடன் கூண்டுக்குள் இருந்து வாக்குமூலம் அளித்த முர்சி, 2013 இல் தன்னை பதவி கவிழ்த்த இராணுவ சதிப்புரட்சிக்கு தலைமை வகித்தவரும் தற்போதைய எகிப்து ஜனாதிபதியுமான அப்துல் பத்தா அல் சிசியை கடுமையாக சாடினார்.
'ஜ{லை 3 ஆம் திகதி (2013) இராணுவத் தளபதி அரசியலமைப்பை ரத்துச் செய்து ஜனாதிபதியை பதவி கவிழ்த்தது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. இது இராணுவ சதிப்புரட்சி இல்லை என்றால், பின்னர் என்ன?" என்று முர்சி கேள்வி எழுப்பினார்.
'நாட்டின் சட்டம் மற்றும் அரசியல் அமைப்புக்கு அமைய இந்த நிதிமன்றத் தால் என் மீது அதிகாரம் செலுத்த முடியாது. கனவான்களே நீங்கள் எனது நீதிபதியும் அல்ல, இது எனது நீதிமன்றமும் அல்ல" என்றும் அவர் குறிப் பிட்டார்.
No comments:
Post a Comment