முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கு நெருக்கமானவர்களால் வெளிநாடுகளில் மறைத்துவைக்கப்பட்டுள்ள பெருந்தொகை பணத்தை மீட்பதற்கு இந்திய ரிசேர்வ் வங்கி, சர்வதேசநாணயநிதியம், உலகவங்கி ஆகியவற்றின் உதவி பெறப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.
முன்னைய அரசாங்கத்தில் உயர்பதவிகளை வகித்தவர்கள் மில்லியன் டொலர்களுக்கு மேல் வெளிநாடுகளில் மறைத்துவைத்திருப்பது புதிய அரசாங்கத்திற்கு தெரியும் என அமைச்சர் ராஜிதசேனரத்தின தெரிவித்துள்ளார்.
குறிப்பிட்ட நபர்களால் வெளிநாடுகளில் மறைத்துவைக்கப்பட்டுள்ள பணத்தை மீட்பதற்கு இந்திய ரிசேர்வ் வங்கி, சர்வதேசநாணயநிதியம், உலகவங்கி ஆகியவற்றின் உதவி பெறப்படும்
வெளிநாடுகளில் உள்ள இலங்கையின் சொத்துக்களை தேடி நாங்கள் நடவடிக்கை எடுப்போம்,பில்லியன் டொலர்கள் பெறுமதியான பணத்தை அவர்கள் சட்டவிரோதமாக சேர்த்ததுடன் வெளிநாடுகளில் மறைத்துவைத்துள்ளனர், நாங்கள் அவற்றை மீட்பதற்கான நடவடிக்கையை ஏற்கனலே ஆரம்பித்துவிட்டோம்,
இவ்வாறான சொத்துக்களை தேடிகண்டுபிடிப்பதற்கு இலங்கைக்கு திறமையும் அனுபவமுமிள்ளை இதனால் சர்வதே உதவிகள் பெறப்பட்டுள்ளன என அவர் குறிப்பிட்டுள்ளார். gtn
No comments:
Post a Comment