சிரியாவில் சரக்கு விமானம் நொறுங்கி விழுந்ததில் 35 ராணுவ வீரர்கள் பலியாகினர்.
சிரியாவில் கட்லிப் மாகாணத்தில் ராணுவ சரக்கு விமானம் ஒன்று பறந்து கொண்டிருந்தது. அதில் ராணுவ வீரர்கள் மற்றும் கருவிகள், வெடிபொருட்கள், ஆயுதங்கள் இருந்தன. அந்த விமானம் அபு அல்–துகர் ராணுவ விமான தளத்தில் தரை இறங்க தயாரானது.
அப்போது நடுவானில் திடீரென எந்திர கோளாறு ஏற்பட்டது. எனவே தரையில் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் 35 ராணுவ வீரர்கள் பலியாகினர். மோசமான வானிலை காரணமாக கடும் பனிப்பொழிவு ஏற்பட்டது. இதனால் அந்த விமானம் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் இதை அல் கொய்தாவின் கிளை அமைப்பான அல்– நுஸ்ரா மறுத்துள்ளனர். அந்த விமானத்தை தாங்கள் சுட்டு வீழ்த்தியதாக டுவிட்டர் இணைய தளத்தில் தெரிவித்துள்ளனர். மேலும் விழுந்து நொறுங்கிய விமானத்தின் பாகங்கள் மற்றும் விபத்தில் பலியானவர்களின் உடல்களையும் போட்டோ எடுத்து வெளியிட்டுள்ளனர்.
சிரியாவில் ராணுவத்துக்கு எதிராக அல்– நுஸ்ரா செயல்பட்டு வருகின்றனர். ராணுவ ஹெலிகாப்டர் மற்றும் விமானங்களை சுட்டு வீழ்த்தி வருகின்றனர்.
No comments:
Post a Comment