Sunday, November 2, 2014

கோழி எச்சத்தின் மூலம் மின்சாரம் - 'கேசி பயர்' இயந்திரம் அறிமுகம்

(India)

கோழி எச்சம், குப்பை உள்ளிட்ட கழிவுகளில் இருந்து மின்சாரம், எரிவாயு தயாரிக்கும் 'கேசி பயர்' இயந்திரத்தை காந்திகிராம பல்கலை பேராசிரியர் கிருபாகரன் கண்டுபிடித்துள்ளார்.

மக்கள்தொகை பெருக்கத்தால் மின்சாரம், எரிபொருட்களின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குப்பை, கழிவுகளை அகற்றுவதும் அரசுக்கு பெரும் சவாலாக உள்ளது. இந்த கழிவுகளை பயன்படுத்தி மின்சாரம், எரிவாயு தயாரிக்கும் 'கேசி பயர்' இயந்திரத்தை காந்திகிராம பல்கலை ஊரக எரிசக்தி மையம் உதவி பேராசிரியர் கிருபாகரன் கண்டுபிடித்துள்ளார்.இந்த இயந்திரத்தின் புனல் போன்ற அமைப்பில் கழிவுகளை கொட்ட வேண்டும். இயந்திரத்துடன் இணைக்கப்பட்ட 'புளோயர்' மூலம் காற்றை செலுத்தி கழிவுகளை எரியசெய்தால் கார்பன் மோனாக்ஸைடு வாயு வெளியேறும். வாயு வெளியேறும் பகுதியில் சமையல் அடுப்பைபொருத்தி எரிவாயுவாக பயன்படுத்தலாம் அல்லது வாயுவை டீசல் மோட்டார்களில் செலுத்தி மின்சாரம் தயாரிக்கலாம்.மின்உற்பத்தி செலவு பாதியாக குறைவதுடன் இயந்திரத்தின் வடிவத்தை தேவைக்கு ஏற்ப மாற்றியமைத்துக் கொள்ளலாம்.

பேராசிரியர் கிருபாகரன் கூறியதாவது: கோழி பண்ணைகளில் மின்சார செலவை குறைக்க கோழி எச்சத்திலிருந்து மின்சாரம் தயாரிக்க 'கேசி பயர்' இயந்திரத்தை தயாரித்தேன். தற்போது இந்த இயந்திரத்தின் மூலம் அனைத்து வகை கழிவுகளில் இருந்தும் மின்சாரம், எரிவாயு தயாரிக்கலாம். 50 கிலோ கழிவினை பயன்படுத்தி 50 கிலோவாட் மின்சாரம் தயாரிக்க முடியும். சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படாது. 50 கிலோ வாட் மின்சாரம் தயாரிக்கும் இயந்திரத்தை வடிவமைக்க ரூ.35 ஆயிரம் மட்டுமே செலவாகும், என்றார்.

No comments:

Post a Comment