Thursday, October 30, 2014

''மனிதாபிமான உதவிகளை மேற்கொள்வதில், முஸ்லிம்களாகிய முன்னிற்க வேண்டும்''

பதுளை, கொஸ்லந்தை, மீரியாபெத்தை பிரதேசத்தில்; நிகழ்ந்த மண்சரிவில் நூற்றுக்கணக்கான மக்கள் சிக்குண்டு இருப்பதாக தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன. மேலும் பலர் பாடசாலைகளில் தஞ்சம்புகுந்துள்ளனர். சகல தரப்பினரும் ஆபத்தில் சிக்கியவர்களுக்கு உதவிபுரியவும் காணாமல்போனோரை கண்டுபிடிக்கவும் கடும்பிரயத்தனம் எடுத்துவருகின்றனர் என்பதையும் அறியக்கிடைக்கிறது.

இந்நிலையில் ஆபத்தில் சிக்கியுள்ள மக்களுக்கு உதவுவதில் அனைவரும் சாதி, சமய வேறுபாடின்றி ஈடுபட வேண்டும் எனவும் குறிப்பாக அப்பிரதேசத்திலுள்ள ஜம்இய்யத்துல் உலமா கிளைகள் ஏனையோரை இணைத்துக் கொண்டு தம்மால் முடியுமான உதவிகளை செய்யுமாறும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா கேட்டுக் கொள்கின்றது. மனிதாபிமான உதவிகளை மேற்கொள்வதில் முஸ்லிம்களாகிய நாம் முன்னிற்க வேண்டும் எனவும் மேற்படி அனர்த்தங்கள் ஏற்படாதிருக்க பிரார்த்தனையில் ஈடுபடுமாறும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சகல முஸ்லிம்களையும் கேட்டுக்; கொள்கின்றது.


அஷ்-ஷைக் முக்ஸித் அஹ்மத்
செயலாளர் - சமூக சேவைப் பிரிவு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

No comments:

Post a Comment