Monday, October 27, 2014

சிங்கள ராவய பிளவுபட்டது..!

இலங்கையின் முன்னணி பௌத்த இனவாத அமைப்புகளில் ஒன்றான சிங்கள ராவய அமைப்பு இரண்டாகப் பிளவுபட்டுள்ளது.

அதன் முக்கிய உறுப்பினர்களான தேசிய அமைப்பாளர் யக்கலமுல்லே பவர, உபதலைவர் புலியத்தே சுதம்ம ஆகிய தேரர்கள் தங்களது பொறுப்புகளிலிருந்து ராஜினாமாச் செய்துள்ளனர். மேலும் அமைப்பை விட்டு தனித்து இயங்கப் போவதாகவும் அறிவித்துள்ளனர்.

அமைப்பின் பொதுச் செயலாளராக உள்ள மடிகல்லே பஞ்ஞாசீஹ தேரரும் விரைவில் அமைப்பின் பொறுப்பிலிருந்து விலகவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமைச்சர் தினேஷ் குணவர்த்தனவின் ஏற்பாட்டில் அக்மீமன தயாரத்தின தேரரை தலைவராகக் கொண்டு சிங்கள ராவய அமைப்பு உருவாக்கப்பட்டிருந்தது.

எனினும் அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்கும் கோத்தபாயவின் பொதுபல சேனா, விமல் வீரவங்சவின் ராவணா பலய போன்ற அமைப்புகளுக்கு கிடைக்கும் முக்கியத்துவம் மற்றும் வசதிகள் சிங்கள ராவய அமைப்புக்கு கிடைப்பதில்லை என்று கூறப்படுகின்றது.

இதன் காரணமாக இந்த அமைப்பு பிளவுபட்டுள்ளது. அமைப்பிலிருந்து விலகிய முக்கியஸ்தர்கள் எதிர்வரும் நாட்களில் ராவணா பலய அல்லது பொதுபல சேனாவில் இணைந்து கொள்ளவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment