(எம்.எம்.ஏ.ஸமட்)
நாட்களின் சூழற்சியால் மாதங்கள் தோன்றுகின்றன. மாதங்கள் சுழன்று வருடங்கள் மலர்கின்றன. ஒவ்வொரு வருடமும் 12 மாதங்களைக் கொண்டவை. இதில் சகல மதத்தினரும் ஒருமித்த கருத்தைக் கொண்டவர்களாக இருக்கின்றனர்.
பரந்து விரிந்த பூமியில் வாழும் வௌ;வேறுபட்ட நாட்டினர், மதத்தினர், இனத்தினர் கால நேரத்தைக் கணக்கிடுவதற்கு வௌ;வேறு முறைகளைப் பின்பற்றி வருகின்றனர். சிலர் சூரியனையும் சிலர் சந்திரனையும் அடிப்படையாகக் கொண்டு காலத்தைக் கணக்கிட்டு வருகின்றனர்.
உலகில் வாழும் முஸ்லிம்கள் சந்திரனின் சுழற்சியைக் கொண்டே மாதத்தைக் கணக்கிட்டு வருகின்றனர். நபி (ஸல்) அவர்கள் மக்கா நகரை விட்டு மதினா நகருக்கு (ஹிஜ்ரத்) சென்ற வராலாற்று நிகழ்வை அடிப்படையாகக் கொண்டு முஸ்லிம்களின் வருடக் கணக்கு கணிப்பிடப்படுகிறது. இது ஹிஜ்ரி வருடம் என அழைக்கப்படுகிறது.
ஹிஜ்ரி வருடக்கணக்கின் முதல் மாதம் முஹர்ரமாகும். இஸ்லாமிய ஹிஜ்ரி 1436 புதுவருடத்திறகான முஹர்ரம் மாதத்தின் தலைப் பிறையைத் தீhமானிப்பதற்கான மகாநாடு இன்று(25) மஃரிப் தொழுகையின் பின்னர் கொழும்பு பெரிய பள்ளிவாசலில் கூடவுள்ளது.
இஸ்லாம் மார்க்கத்தோடும் இஸ்லாமியரோடும் சம்பந்தப்பட்ட அநேக விடயங்கள் பிறைக் கணக்கெடுப்பை மையமாகக் கொண்டே மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நோன்பு, ஹஜ் வணக்கங்களின் ஆரம்பம், பெருநாள் தின நிர்ணயிப்பு. ஸக்காத் ஏழை வரி கொடுப்பதற்கான காலம், கணவன் இறந்த அல்லது பிரிந்ததற்காக மனைவி அனுஷ்டிக்க வேண்டிய 'இத்தா'வுக்குரிய நாட்கள், திருமணத்திற்கான நாட்கள் போன்ற பலவற்றுக்கு பிறைக்கணக்கெடுப்பானது முக்கியம் பெறுகிறது. இதில் இலங்கை வாழ் சர்வதேச பிறையாளர்கள் நோன்பை அடைதிலும் பெருநாட்களைக் கொண்டாடுவதிலும் முரண்பட்டுக்கொள்வதையும் வருடாவருடம் காண்கின்றோம்.
பிறையின் முக்கியத்துவம் தொடர்பாக புனித குர்ஆனின் ஸூறா பகராவில் கீழ்வருமாறு தெளிவுபடுத்தப்படுகிறது. ' (நபியே) பிறைகளைப் பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கிறார்கள் (அதற்கு) அவை மனிதர்களுக்கும், ஹஜ்ஜு(வணக்கத்து)க்கும் நேரங்களைக் குறிப்பிடுபவை' எனக் கூறுவீராக.
மேலும், 'வானங்களையும் பூமியையும் படைத்த நாளில் (இருந்து மறுமை நாள் வரை நடந்தேறும் அனைத்து விஷங்களும் எழுதப்பட்ட) அல்லாஹ்வின் பதிவேட்டில் உள்ளவாறு நிச்சயமாக மாதங்களின் எண்ணிக்கை அல்லாஹ்விடத்தில் (ஒரு வருடத்திற்குப்) பன்னிரண்டு மாதங்களாகும். அவற்றில் நான்கு (மாதங்கள்) புனிதமானவையாகும்' என அல்குர்ஆனின் ஸூறா தௌபாவில் அல்லாஹ் தெளிவுபடுத்துகின்றான்.
அப்புனித மிக்க நான்கு மாதங்கள் துல்கஃதா, ரஜப், துல்ஹஜ், முஹர்ரம் ஆகியவை என நபி (ஸல்) அவர்கள் தெரிவிக்கின்றார்கள்
;(ஆதாரம்: புஹாரி, அஹ்மத்)
இம்மாதங்களில் போர் புரிவது விலக்கப்பட்டுள்ளது. அதேசமயம், நமது விரோதிகள் நம்முடன் வலிய சண்டைக்கு வந்தால் நம்மைப் பாதுகாத்துக்கொள்ள போரிடலாம் என்பதை இஸ்லாம் கற்றுத் தருவதையும் நாம் அறிவோம்.
இதன் மூலம் மனித சமூதாயத்தில் சண்டை சச்சரவு இல்லாத ஒரு அமைதியான சூழ்நிலையை உருவாக்குவது இம்மாதத்தில் முஸ்லிம்களின் கடமையாகிறது.
இது அல்லாஹ் தனது திருமறை மூலம் நமக்கிடும கட்டளையாகும். இக்கட்டளையைச் சரிவர நிறைவேற்றும்போது சமூகத்திற்கிடையே மட்டுமல்ல நாட்டிலும் முழு உலகிலும் முஸ்லிம்களால் அமைதி ஏற்படும்.
ஆனால், துரஷ்டவசமான விடயம் என்னவெனில் இன்று முழு உலகிலும் யுத்தம் நடக்கின்ற, சண்டை சச்சரவு நிறைந்த நாடுகளாக முஸ்லிம் நாடுகள் காணப்படுகின்றன. இறைகட்டளையின் பிரகாரமும் நபி வழியிலும் வாழ்ந்து அமைதி, பொறுமை விட்டுக் கொடுப்பு என்பவற்றின் ஊடாக பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டிய இந்த முஸ்லிம் சமூகம,; பல்வேறு சிற்சிறு விடயங்களுக்காக இந்த புனித மாதங்களிலும் தங்களைத் தாங்களாகவே அழித்துக் கொள்ளும் நிகழ்வுகள் முஸ்லிம் நாடுகளில் நடந்தேறிக் கொண்டிருப்பதை கண்டுகொண்டிருக்கின்றோம்.
முஸ்லிம்களின் விரோதிகள் இஸ்லாத்தின் வளர்ச்சியைப் பொறுத்துக்கொள்ள முடியாது முஸ்லிம்களைக் கொண்டே முஸ்லிம்களை நேரடியாகவும் மறைமுகமாகவும் அழித்தொழிக்கும் செற்பாட்டில் இறங்கி அவர்களின் இலக்கை நோக்கி உலகளாவிய ரீதியில் பயணித்துக்கொண்டிருக்கிறார்கள்.
இலங்கையிலும் அத்தகையதொரு நிலை, அரசியல் ரீதியிலும் வேறு வழியிலும் முஸ்லிம்களிடையே பிளவுகளை ஏற்படுத்தி அவர்களுக்கிடையே பகைமையை உருவாக்கி, ஒற்றுமையைச் சீர்குலைத்து அதன் ஊடாக இஸ்லாத்தைக் கேவலப்படுத்தவும் முஸ்லிம்களை தங்களுக்குள் தங்களை எதிரிகளாக நோக்கவும் செய்யும் கைங்கரியத்தில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார்கள்.
இவ்வாறானதொரு நிலையில், நாம் நமது இஸ்லாமிய புதுவருடமான ஹிஜ்ரி 1436ஆம் வருடத்தில் காலடியெடுத்து வைக்கிறோம். ஆனால் நம்மில் பலருக்கு நமது புதுவருடத்தின் முக்கியத்துவம் விளங்காமல் இருப்பது கவலையளிக்கும் விடயமாகும். ஏன் நம்மில் சிலருக்கு இஸ்லாமி புதுவருடம் எப்போது பிறக்கிறது என்று கூடத் தெரியாதவர்களாகவும் இஸ்லாமிய வருடத்தின் 12 மாதங்களையும் ஒழுக்குமுறையாக சொல்லாத் தெரியாதவர்களாகவும் எந்த மாதத்தின் பின்னர் எந்த மாதம் உள்ளது என்பதைக் கூட் அறியாதவர்களாவும் முஸ்லிம்கள் என்று கூறிக்கொண்டு நம்மில் சிலர் உலா வருகிறார்கள்.
ஏனைய சமூகங்களின் புதுவருடங்களை கொண்டாடத்துடிக்கும் நமது இளைஞர் சமூகம் அவர்களின் புதுவருட காலங்களில் வாழ்துக்களை சமூக இணைத்தளங்களிலும் குறுந்தகவல்கள் ஊடகாவும் பரிமாறிக்கொள்ளும் நமது இளைஞர்களும் சிறுவர்களும் தமது புதுவருடத்தை சிறப்பாக் கொண்டாடவும் வாழ்த்துக்களைப் பறிமாறவும் மறந்துவி;டுகிறார்கள்;.
ஏன் இந்த நிலை? நமது தனித்துவம் எங்கே போய்விட்டது? நமது புதுவருடத்தின் முதல் மாதமாம் முஹர்ரம் மாதத்தின் புனிதம் பற்றியும் அம்மாதத்தில் நிறைவேற்ற வேண்டிய கடமைகள் குறித்தும் நம்மில் எத்தனை பேர் அறிந்திருக்கிறோம். இதற்குக் காரணமென்ன?
இறை கட்டளையும் நபி வழியையும் பின்பற்றி அதன்பிரகாரம் நமது அத்தனை விடயங்களையும் நிறைவேற்றி வாழ வேண்டிய நாம் நம்மை நாமே நமது செயற்பாடுகளினால் கேவலப்படுத்திக்கொண்டு பெயரளவில் முஸ்லிம்களாக வாழ்ந்துகொண்டிருக்கிறோம். நாம் விடுகின்ற தவறுகளே நம்மை ஏனைய சமூகத்தின் மத்தியில் பலவீனப்படுத்திக் கொண்டிருக்கின்றன.
ஆண்மீகக் கொள்கைகளை வளர்ப்பதற்காகவும், அரசியல் கட்சிகளை வளர்த்தெடுப்பதற்காகவும் உழைக்கும் நாம், நமது இளைஞர் சமூகமும் வளரும் சிறுவர்களும் எங்கே போய்க்கொண்டிருக்கிறார்கள். அவர்களின் தவறான பாதைகள் முஸ்லிம் சமூகத்தை எங்கே கொண்டு சேர்க்கும் என்று சிந்தித்து செயற்படுவதற்கு தயாரில்லை. அவ்வாறு செயற்பட்டாலும் அவை தொடராக இடம்பெறுவதில்லை. இதுதான் நமது சமூகத்தின் இன்றைய நிலை என்று கூறுவதில் தவறேதும் இருக்காது.
அந்தவையில், இன்று உதயமாகும் நமது புதுவருடத்தில் புதிய மாற்றங்கள் நமது சமூகத்திலும் தனி வாழ்விலும் ஏற்பட வேண்டும். அதற்கான பயணங்கள் தொடங்கப்பட வேண்டும். நமது ஒவ்வொரு விடயத்திலும் இஸ்லாமிய வரையறைக்குள் நின்று நமது தனித்துவம் பேணப்பட வேண்டும். அதன் மூலம் நாம் நம்மைப் கௌரவப்படுத்தியவர்களாகவும் ஏனைய சமூதாயத்தினருக்கு முன்மாதிரிச் சமூகமாகவும் இந்த நாட்டில் வாழ முடியும்.
மாறாக, அரசியல் என்றும் ஆண்மீகக் கொள்கைள் என்றும் வியாபாரம் என்றும் பதவி பட்டங்கள் என்றும் ஊர்; என்றும் பிரதேசம் என்றும் நமக்குள் நாம் போட்டி போட்டு ஒருவரையொருவர் காட்டிக்கொடுத்து வாழ்வதனால் நம்மால் எதையும் சாதித்துவிட முடியாது. அவை நம்மை நமது ஒற்றுமையை பலவீனப்படுத்தும் என்பதை மனதில் நிறுத்தி, புதிய ஆண்டியில் புதிய சிந்தனைகளோடு மாற்றங்களை நோக்கி பயணிக்க இறைவன் வழியமைப்பானாக.
நமது இப்புதுவருடம் நாம் காணத்துடிக்கும் மாற்றங்களை நமது சமூகத்திலும் தனி வாழ்விலும் ஏற்படுத்த வேண்டும். மலரும் ஹிஜ்ரி 1436ஆம் ஆண்டு நமது வாழ்வினதும் சமூகத்தினதும் ஒவ்வொரு விடயத்திலும் மாற்றங்களை ஏற்படுத்தட்டும். பிறக்கும் புதுவருடம் புதிய சிந்தனைகளை உருவாக்கட்டும். வாழ்த்துக்கள் அனைவருக்கும் உரித்தாகட்டும.;
No comments:
Post a Comment