ஜாதிக ஹெல உறுமய கட்சிக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கும் இடையிலான முரண்பாடுகளை தீர்க்க பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச மற்றும் அமைச்சர் டலஸ் அழப்பெரும ஆகியோர் முயற்சித்து வருகின்றனர்.
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ரத்து செய்தல் உள்ளிட்ட ஏழு அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு ஜனாதிபதி மஹிந்தவிடம், ஜாதிக ஹெல உறுமய கட்சியின் தலைவா் அதுரலிய ரதன தேரர் கோரியிருந்தார்.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக உரிய பதிலளிக்கப்படாவிட்டால், அரசாங்கத்தை விட்டு வெளியேறி, ஜனாதிபதிக்கு எதிராக பிரச்சாரத்தில் ஈடுபட போவதாக ஹெல உறுமய எச்சரிக்கை விடுத்திருந்தது.
வரவு செலவுத் திட்டம் குறித்த வாக்கெடுப்பின் போதும் அரசாங்கத்திற்கு எதிராக வாக்களிப்பது என ஜாதிக ஹெல உறுமய தீர்மானித்திருந்தது.
எனினும் இந்த முரண்பாட்டு நிலைமையை தீர்த்து வைக்க பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய மற்றும் அமைச்சர் டலஸ் அழப்பெரும ஆகியோர் முயற்சித்து வருகின்றனர்.
இரு தரப்பினருக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்தி சுமூகமான தீர்வுத் திட்டமொன்றை எட்டும் முயற்சிகளில் இருவரும் ஈடுபட்டுள்ளனர்.
இதேவேளை, எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவளிப்பது என்பது தொடர்பில் ஜாதிக ஹெல உறுமய கட்சி நேற்று அவரச கூட்டமொன்றை நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment