கொஸ்லாந்தை - மீறியபெந்த தோட்டத்தில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்குண்டுள்ளவர்களை மீட்கும் பணிகள் இன்று காலை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இன்று காலை தொடக்கம் மேற்கொள்ளப்பட்டு வரும் மீட்பு பணியின் போது சடலங்கள் இதுவும் மீட்கப்படவில்லை என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பதுளை மாவட்ட இணைப்பபாளர் எம்.எல்.உதயகுமார அத தெரணவிடம் தெரிவித்தார்.
மண்சரிவால் இடம்பெயர்ந்துள்ள 818 பேர் இரண்டு பாடசாலைகளில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
கொஸ்லாந்தை தமிழ் வித்தியாலயத்தில் 146 குடும்பங்களைச் சேர்ந்த 518 பேரும் பூணாகலை தமிழ் மாகா வித்தியாலயத்தில் 97 குடும்பங்களைச் சேர்ந்த 300 பேரும் தங்க வைக்கப்பட்டுள்ளதாக எம்.எல்.உதயகுமார தெரிவித்தார்.
நேற்றைய தினம் காலை 7 மணியளவில் இடம்பெற்ற மண்சரிவில் நூற்றுக்கணக்கானோர் சிக்கியுள்ளதாகவும் அவர்களில் 10 பேரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
500 இராணுவத்தினர் உள்ளடங்களாக பொலிஸார், பொது மக்கள் இணைந்து மீட்பு பணிகளை முன்னெடுத்து வருகின்றனர்.
No comments:
Post a Comment