2015ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் மீதான வாக்கெடுப்பில் இருந்து விலகி இருக்க தீர்மானித்துள்ளதாக ஜாதிக ஹெல உறுமய தெரிவித்துள்ளது.
அந்த கட்சி விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாம் அரசாங்கத்திடம் முன்வைத்த அரசியல் யாப்பு சீர்த்திருத்தம் மற்றும் அரசியல் திருத்தம் தொடர்பில் தொடர்ந்தும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
இதனையடுத்தே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக கட்சியின் ஊடக செயலாளர் நிஷாந்த ஸ்ரீ வர்ணசிங்க தெரிவித்துள்ளார்.
வரவு செலவுத் திட்டத்தின் முதலாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நாளை நாடாளுமன்றத்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment