(Kalaiyarasan Tha)
இனிமேல், பேஸ்புக் பாவிப்பதற்கு கட்டணம் அறவிடப் போவதாக, ஒரு வதந்தியை பரப்பி வருகிறார்கள். உண்மையிலேயே, பேஸ்புக் பற்றி ஏதாவது தெரிந்து கொண்டு தான் இப்படியான வதந்திகளை பரப்புகிறார்களா? குறைந்த பட்சம் பேஸ்புக் நிறுவனத்தின் வருமானம் எங்கிருத்து வருகின்றது என்பதையாவது அறிந்து வைத்திருக்கிறார்களா?
அமெரிக்க பங்குச் சந்தையில் பிரபலமான, அதிகளவு இலாபம் சம்பாதிக்கும் பங்குகளை கொண்ட, பேஸ்புக் எதற்காக நம்மிடம் கட்டணம் அறவிட வேண்டும்? ஏற்கனவே விளம்பரங்கள் மூலம் கோடிக் கணக்கான டாலர்கள் இலாபம் சம்பாதிப்பதால் தான், அதன் பங்குகளின் பெறுமதி அதிகரிக்கிறது.
சாதாரண மக்களின் நுகர்வு வெறி தான் முதலாளித்துவ வெற்றியின் இரகசியம். பேஸ்புக் பாவனையாளர்களும், பலர் நுகர்வுக் கலாச்சாரத்திற்கு அடிமையானவர்கள் தான். பேஸ்புக் என்ற கடலில் திரியும் மீன்களை, விளம்பரங்கள் என்ற தூண்டில்கள் மூலம் பிடிப்பதற்கு உதவுவதற்காகத் தான், பேஸ்புக் இலவசமாக இயங்கி வருகின்றது.
உண்மையில் அது "இலவசம்" அல்ல. நாங்கள் பொருட்களை வாங்கி நுகரும் பொழுது, பேஸ்புக் நிறுவனத்தின் செலவுகளையும், மேலதிக இலாபத்தையும் நாமே கொடுத்து விடுகிறோம். முதலாளிகள் இளிச்சவாயர்களாக கருதும் நுகர்வோர்கள் இருக்கும் வரையில், பேஸ்புக் தொடர்ந்தும் "இலவசமாக" இயங்கிக் கொண்டிருக்கும்.
No comments:
Post a Comment