Sunday, October 26, 2014

கதீப்மார், இமாம்கள் சம்மேளன ஒன்றுகூடல் நிகழ்வில் முக்கிய உலமாக்கள் வெளிநடப்பு


(பழுலுல்லாஹ் பர்ஹான்)

காத்தான்குடி கதீப்மார் இமாம்கள் சம்மேளனத்தினால் புதிய காத்தான்குடி அன்வர் பள்ளிவாயலில் 25-10-2014 நேற்று சனிக்கிழமை இரவு நடாத்தப்பட்ட ஹஜ்ஜூப் பெருநாள் ஒன்று கூடல் மற்றும் ஹிஜ்ரி 1436 முஹர்ரம் இஸ்லாமிய புதுவருட நிகழ்வில் பங்கேற்ற காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமாவில் அங்கம் வகிக்கும் முக்கிய உலமாக்கள் சிலர் சிறிது நேரம் நிகழ்விலிருந்து வெளிநடப்பு செய்தனர்.

கதீப்மார் இமாம்கள் சம்மேளனத்தினால் நடாத்தப்பட்ட குறித்த ஹஜ்ஜூப் பெருநாள் ஒன்று கூடல் மற்றும் ஹிஜ்ரி 1436 முஹர்ரம் இஸ்லாமிய புதுவருட நிகழ்வில் அகில இலங்கை சுன்னத் வல் ஜமாஅத் சூபிச உலமா உகள் சபையின் பொதுச் செயலாளர் மௌலவி எம்.எல்.ஏ.எம்.காசீம் (பலாஹி) வருகைதந்ததையடுத்தே அங்கு அதிதிகளாக அழைக்கப்பட்ட காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமாவில் அங்கம் வகிக்கும் முக்கிய உலமாக்கள் சிலர்; நிகழ்விலிருந்து வெளிநடப்பு செய்து நிகழ்வை சிறிது நேரம் பகிஷ்கரித்தனர்.

இதனை தொடர்ந்து குறித்த நிகழ்வில் அதிதிகளாக அழைக்கப்பட்ட காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமாவில் அங்கம் வகிக்கும் முக்கிய உலமாக்கள் காசீம் மௌலவியை அழைத்திருக்க கூடாது, அவர் இருந்தால் நாங்கள் வைபவத்தில் கலந்து கொள்ளமாட்டோம். காசீம் மௌலவியை எடுத்தால் ரவூப் மௌலவியையும் எடுக்கவேண்டும் அவருக்கும் இவருக்கும் என்ன வித்தியாசம், காசீம் மௌலவியை வெளியேற்றுங்கள். காசீம் மௌலவி இஸ்லாமிய அகீதா கொள்கையில் பிழையானவர் போன்ற கருத்துக்களை தெரிவித்தனர்.

இதன் போது குறித்த நிகழ்வில் பிரதம அதிதியாக அழைக்கப்பட்ட பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் வருகை தந்திருந்தபோதும் நிலைமையை அறிந்து உள்ளே வராமல் வெளியில் நின்றவாறே சென்று விட்டார்.

இதையடுத்து நிலைiமையை விளங்கிக் கொண்ட பள்ளிவாயல்கள் கதீப்மார் மற்றும் இமாம்கள் சம்மேளனத்தின் தலைவர் மௌலவி ஏ.எல்;.ஆதம்லெப்பை (பலாஹி) மற்றும் அதன் செயலாளர் மௌலவி எஸ்.எம்.எம்.முஸ்தபா (பலாஹி) ஆகியோர் உள்ளே சென்று காசீம் மௌலவியிடத்தில் விடயத்தை தெரிவித்ததையடுத்து காசீம் மௌலவி வைபவத்தை விட்டு வெளியேறினார்.

இதையடுத்து  நிகழ்விலிருந்து வெளியேறிய காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமாவில் அங்கம் வகிக்கும் முக்கிய உலமாக்கள் மற்றும் பிரமுகர்கள் உள்ளே சென்று அமர்ந்தனர்.

பின்னர் பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் மற்றும் காத்தான்குடி நகர சபைத் தவிசாளர் அஸ்பர் ஆகியோர் தொலைபேசி மூலம் அழைக்கப்பட்டு வருகைதந்தனர். இதயேடுத்து நிகழ்வு தொடர்ந்து நடைபெற்றது.

No comments:

Post a Comment