அஹதிய்யா பொதுப் பரீட்சைகள் இரண்டுக்குமான பாடப்புத்தகங்களின் வெளியீட்டு வைபவம் இன்ஷா அல்லாஹ் எதிர் வரும் 2014 நவம்பர் மாதம் 04 ஆம் திகதி செவ்வாய்கிழமை பிற்பகல் 4.00 மணிக்கு கொழும்பு தர்மபால மாவத்தையில் அமைந்துள்ள புத்தசாசன மற்றும் மத அலுவல்கள் அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடாத்துவதற்கு முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் ஏற்பாடு செய்துள்ளதாக பணிப்பாளர் எம்.எச்.எம்.ஸமீல்.
இவ்வைபவத்திற்கு மாண்பு மிகு பிரதமரும் புத்தசாசன மற்றும் மத அலுவல்கள் அமைச்சருமான தி.மு.ஜயரட்ன அவர்கள் பிரதம அதிதியாக கலந்து சிறப்பிக்கவுள்ளார். அமைச்சின் பிரதி அமைச்சர் ஆ.மு.யு.னு.ளு குணவர்தன மற்றும் அமைச்சின் செயலாளர் திசாநாயக்க ஆகியோர்கள் சிறப்பு அதிதிகளாகவும் கலந்து கொள்ளவுள்ளனர். அத்துடன் இவ்வெளியீட்டு வைபவத்தில் கலந்து கொள்வதற்காக முஸ்லிம் அமைச்சர்கள் முஸ்லிம் பிரமுகர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் நூலாக்கக் குழு உறுப்பினர்கள் மத்திய அஹதிய்யா சம்மேளன உறுப்பினர்கள், மாவட்ட சம்மேளன உறுப்பினர்களும் மற்றும் பிரமுகர்களும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர். வெளியிடப்படவுள்ள புத்தகங்களின் விபரங்கள் வருமாறு,
அஹதிய்யா இறுதிச் சான்றிதழ் பரீட்சைக்குரிய பாடப்புத்தகங்கள் வருமாறு
1.அகீதாவும் மஸாதிருஷ் ஷரீஆவும் (இஸ்லாமிய கோட்பாடும் சட்ட மூலாதாரங்களும்.)
2. அல் பிக்ஹுல் இஸ்லாம் (இஸ்லாமிய சட்டநெறி)
3. அல் அக்லாகுல் இஸ்லாம் (இஸ்லாமிய பண்பாடு)
4. அஸ்ஸீரா வத்தாரீக் (இஸ்லாமிய வரலாறு)
இஸ்லாமிய தீனிய்யாத் (தர்மாசாரிய) சான்றிதழ் பரீட்சைக்குரிய பாடப் புத்தகங்கள்.
1. அகீதாவும் மஸாதிருஷ் ஷரீஆவும் (இஸ்லாமிய கோட்பாடும் சட்ட மூலாதாரங்களும்)
2. அல் பிக்ஹுல் இஸ்லாம். (இஸ்லாமிய சட்டநெறி)
3. அல் அக்லாகுல் இஸ்லாம் (இஸ்லாமிய பண்பாடுகள்)
4. அஸ் ஸீரா வத்தாரீக் (இஸ்லாமிய வரலாறு)
5. அல் அதபுல் இஸ்லாம் (இஸ்லாமிய இலக்கியம்)
6. அரபு மொழியும் தஜ்வீத் சட்டதிட்டங்களும்
மேற்குறிப்பிட்டப்பட்டுள்ள தமிழ் மொழி மூலமான பத்து பாடப் புத்தகங்களை வெளியீட்டு வைப்பதுடன் சிங்களம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் பரீட்சைக்கு தோற்றும் பரீட்சார்திகளின் குறைபாட்டையும் நிவர்த்தி செய்து அவர்களுக்கு சிங்களமொழியிலான பாடப்புத்தகங்களையும் ஆங்கில மொழிமூலமான பாடப் புத்தகங்களையும் மொழிபெயர்த்து வெளியிடுவதற்கான நடவடிக்கைகளை திணைக்களம் மேற்கொண்டு வருகின்றது. இப்பத்து பாடபுத்தகங்களையும் வெளியிடவதற்கு சுமார் 6 மில்லியன் ரூபா திணைக்களம் செலவு செய்துள்ளதுடன் புத்தகங்களை சகல அஹதிய்யா பாடசாலைகளுக்கும் வழங்குவதற்கு மத்திய அஹதிய்யா சம்மேளனத்தினூடாக ஒருங்கிணைந்த திட்டமொன்றை வகுத்து செயல்படுத்துவதற்கும் திணைக்களம் உத்தேசித்துள்ளது.
No comments:
Post a Comment